சிஇஓ உடன் லடாய்! ஃபோக்ஸ்வேகன் தலைமை டிசைனர் டிஸ்மிஸ்! ஒரு காருக்கு இவ்வளவு அக்கப்போரா?

ஃபோக்ஸ்வேகன் நிர்வாகத்தில் தலைமை டிசைனராக இருந்தவரை அந்நிர்வாகம் டிஸ்மிஸ் செய்து அந்த இடத்திற்கு வேறு ஒருவரை நியமித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

உலகின் கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஃபோக்ஸ்வேகன், இந்நிறுவனம் தனது ஃபோக்ஸ்வேகன் பிராண்ட் மட்டுமல்லாமல் வேறு சில பிராண்ட்களிலும் கார்களை விற்பனை செய்து வருகிறது. ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு அந்நிறுவனம் தயாரிக்கும் கார்களை வடிவமைக்கும் வடிவமைப்பாளர் பதவி மிகவும் முக்கியமானது. காரின் வடிவமைப்பை பொறுத்தே அதன் விற்பனை மற்றும் பிராண்டின் தரம் எனச் சகல விஷயங்களும் இருக்கிறது.

சிஇஓ உடன் லடாய்! ஃபோக்ஸ்வேகன் தலைமை டிசைனர் டிஸ்மிஸ்! ஒரு காருக்கு இவ்வளவு அக்கப்போரா?

இந்நிலையில் ஃபோக்ஸ்வேகன் பயணிகள் வாகன பிரிவிற்கு புதிய சிஇஓவாக தாமஸ் ஸ்கேஃப்பர் என்பவர் சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்ற பின்பு ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை டிசைனரான ஃஜோஸ்ப் காபன் என்பவர் பணியிலிருந்து நீக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதை உறுதிப்படுத்தும் விதமாக அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.

இது குறித்து ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் டெக்னிக்கல் மேம்பாட்டுப் பிரிவின் ஃபோர்டு உறுப்பினரான கை குருனீட்ஸ் என்பவர் அளித்த அறிக்கையின்படி: " ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் தலைமை டிசைனரான ஜோஸ்ஃப் காபன் என்பவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அவரது டிசைன் மொழி ஃபோக்ஸ்வேகன் கார்களில் முக்கியமான தட்தை பதித்துள்ளது. தற்போது அவர் தலைமை டிசைனர் பதிவிலிருந்து நீக்கப்படுகிறார். அவரது பணிக்காக ஃபோக்ஸ்வேகன் போர்டு குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. " எனக் கூறினார்.

மேலும் அதில் "அதே நேரம் தலைமை டிசைனர் பதிவிக்கு அண்ட்ரஸ் மைட்டிட் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பென்ட்லி குழுமத்தில் தலைமை டிசைனராக இருந்தவர் தற்போது ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் தலைமை டிசைனராக மாற்றப்பட்டுள்ளார். இவருடன் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறோம். " எனக் கூறினார்.

காபனை ஏன் ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம் நீக்கியது என்பதற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை அவர்கள் வெளியிடவில்லை மாறாக ஆனால் வெளியில் கசிந்துள்ள தகவலின்படி புதிய சிஇஓவாக உள்ள தாமர் ஸ்காஃபர் என்பவருக்கு காபனின் டிசைன் மொழிகள் பிடிக்கவில்லை என்றும், மேலும் முனிச் ஆட்டோ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஐடி லைஃப் கான்செப்ட் காரை ஸ்காஃபர் செடான் காரிலிருந்து கிராஸ் ஓவர் காராக மாற்ற வேண்டும் என விரும்பியதாகவும் ஆனால் இதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதன் உண்மைத் தன்மை தெரியவில்லை.

காபன் ஆட்டோமொபைல் டிசைன் குறித்த படிப்பில் 1997ம் ஆண்டு மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றவர். அதன் பின் இவர் கடந்த 1993ம் ஆண்டு முதலே ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பணியாற்றிக்கொண்டே படித்து முன்னேறி தலைமை டிசைனர் இடத்தை பிடித்துள்ளார். இவர் பணிக் காலத்தில் ஆடி பிராண்டில் உள்ள பல முக்கிய கார்களின் டிசைன் இவரது ஆலோசனையின் படியே நடந்தது. குறிப்பாக ஆடிஏ1, ஆடி இட்ரான் ஜிடி, ஆடி க்யூ3 மற்றும் ஆடி க்யூ8 ஆகிய கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Volkswagen chief designer fired know the reason
Story first published: Saturday, January 28, 2023, 11:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X