அடுத்த மாதம் பெங்களூரில் டிராக் ரேஸ்... தமிழக ரேஸ் வீரர்கள் தயாராகலாம்!

By Saravana Rajan

வரும் செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில், பெங்களூரில் Vroom என்ற பெயரில் குவார்ட்டர் மைல் டிராக் ரேஸ் நடைபெற உள்ளது. பெங்களூரை சேர்ந்த ஜெனிவா சர்வீசஸ் அமைப்பு நடத்தும் இந்த போட்டியில் பங்குபெறுவதற்கு தமிழகத்தை சேர்ந்த கார், பைக் பந்தய வீரர்கள் இப்போதை தயாராவதற்கு ஏதுவாக இந்த செய்தியை எமது சிறப்பு வீடியோ தொகுப்புடன் முதலில் வெளியிடுகிறது டிரைவ்ஸ்பார்க் தளம்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் எடிசன் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், வரும் செப்டம்பரில் இரண்டாவது முறையாக இந்த டிராக் ரேஸ் போட்டி நடக்க இருக்கிறது. பெங்களூரிலுள்ள ஜக்கூர் விமான தளத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி உள்பட நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் மோட்டார் பந்தய வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்திய மோட்டார் பந்தய சம்மேளனத்தின் மேற்பார்வையில் நடைபெற இருக்கும், இந்த போட்டியில் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்ட கார்கள், சூப்பர் கார்கள், சூப்பர் பைக்குகள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் டிராக் ரேஸ் போட்டி நடைபெற இருக்கிறது. மோட்டார் பந்தய ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியிருக்கும் இந்த போட்டியின் அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் மீடியா பார்ட்னராக டிரைவ்ஸ்பார்க் தளம் செயல்பட உள்ளதையும் பெருமகிழ்வுடன் டிரைவ்ஸ்பார்க் தமிழ் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

டிராக் ரேஸ்
 

இந்த போட்டியில் பங்குபெறுவதற்கான கட்டண விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை விரைவில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம். இந்த போட்டியில் பங்குபெற விரும்பும் மோட்டார் பந்தய வீரர்கள் இப்போதே தயாராகலாம். உங்களது நட்பு வட்டத்தில் இருக்கும் மோட்டார் பந்தய வீரர்களிடத்திலும் இந்த தகவலை அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கடந்த எடிசனின் பிரத்யேக புகைப்படத் தொகுப்புக்கு இங்கே க்ளிக் செய்யவும். டிக்கெட்டுகள் புக்மைஷோ தளத்தில் முன்பதிவு பெற முடியும். இந்த போட்டி குறித்த தகவல்களுக்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் இணைந்திருங்கள்.

Most Read Articles

English summary
vroom 2nd edition drag race in Bangalore.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X