பைலட்களின் தோள்பட்டையில் உள்ள மஞ்சள் கோடுகள் எதை குறிக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே...

விமான பைலட்களின் தோள்பட்டையில் உள்ள கோடுகளுக்கு என்ன அர்த்தம்? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

பைலட்களின் தோள்பட்டையில் உள்ள மஞ்சள் கோடுகள் எதை குறிக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே...

விமான பைலட்களின் சீருடையை உன்னிப்பாக கவனித்துள்ளீர்களா? அப்படியானால் அவர்களுடைய தோள்பட்டையில் மஞ்சள் நிற கோடுகள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஒரு சில பைலட்களின் தோள்பட்டையில் ஒரு கோடும், ஒரு சில பைலட்களின் தோள்பட்டையில் இரண்டு கோடுகளும் என கோடுகளின் எண்ணிக்கை மாறுபடும்.

பைலட்களின் தோள்பட்டையில் உள்ள மஞ்சள் கோடுகள் எதை குறிக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே...

பைலட்களின் தோள்பட்டையில் ஒன்றில் இருந்து அதிகபட்சமாக நான்கு கோடுகள் வரை இருக்கும். கோடுகள் இல்லாமாலோ அல்லது ஐந்து, ஆறு போன்ற எண்ணிக்கையிலோ கோடுகள் இருக்காது. இந்த மஞ்சள் நிற கோடுகள், வணிக ரீதியிலான விமானங்களை இயக்கும் பைலட்களின் தகுதி மற்றும் அவர்களுடைய அனுபவத்தை எடுத்துக்காட்டுகிறது.

பைலட்களின் தோள்பட்டையில் உள்ள மஞ்சள் கோடுகள் எதை குறிக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே...

அதாவது பயிற்சி காலத்தின் கீழ் உள்ள பைலட்களின் தோள்பட்டையில் ஒரே ஒரு மஞ்சள் நிற கோடு மட்டும் இருக்கும். சில சமயங்களில் விமான உதவியாளர்களும் இந்த சின்னத்தை அணிந்திருப்பதை பார்க்கலாம். அதே சமயம் தோள்பட்டையில் இரண்டு கோடுகள் இருந்தால், அவர்கள் விமான பொறியாளர்கள் அல்லது இரண்டாம் அலுவலர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு விமானத்தை இயக்குவதற்கான தகுதி உண்டு.

பைலட்களின் தோள்பட்டையில் உள்ள மஞ்சள் கோடுகள் எதை குறிக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே...

அதே சமயம் தோள்பட்டையில் மூன்று கோடுகள் இருந்தால், அது கோ-பைலட்களை குறிக்கும். விமானத்தில் கட்டளைகளை பிறப்பிப்பதில், இரண்டாவது இடத்தில் உள்ளவர்கள் இவர்கள்தான். விமான பயணங்களில், கேப்டன்களுக்கு அனைத்து விதங்களிலும் உதவி செய்யக்கூடியவர்களாக கோ-பைலட்கள் இருந்து வருகின்றனர்.

பைலட்களின் தோள்பட்டையில் உள்ள மஞ்சள் கோடுகள் எதை குறிக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே...

அதே நேரத்தில் தோள்பட்டையில் நான்கு கோடுகள் இருந்தால், அது விமானங்களின் கேப்டனை குறிக்கும். விமானங்களில் மிகவும் முதன்மை நிலையில் இருப்பது கேப்டன்கள்தான். விமானங்களின் இயக்கம், பாதுகாப்பு என கேப்டன்களுக்கு மிகவும் முக்கியமான பொறுப்புகள் உள்ளன. இனி பைலட்களின் தோள்பட்டை கோடுகள் மூலம் அவர்களின் தகுதியை கண்டறிந்து விடுவீர்கள் என நம்புகிறோம்.

பைலட்களின் தோள்பட்டையில் உள்ள மஞ்சள் கோடுகள் எதை குறிக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே...

இந்த செய்தியின் தொடக்கத்தில் பைலட்களின் தோள்பட்டையில் மஞ்சள் நிற கோடுகள் இருக்கும் என்று கூறியிருந்தோம் அல்லவா? இது பொதுவாக பயன்படுத்தப்பட்டு வரும் நிறமாகும். ஆனால் பைலட்களின் தோள்பட்டையில் உள்ள கோடுகள் எந்த வண்ணத்தில் இருக்க வேண்டும்? என்பதை முடிவு செய்யும் சுதந்திரம் விமான நிறுவனங்களுக்கு உள்ளது.

பைலட்களின் தோள்பட்டையில் உள்ள மஞ்சள் கோடுகள் எதை குறிக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே...

அதேபோல் இந்த கோடுகள் எந்த டிசைனில் இருக்கலாம்? என்பதையும் விமான நிறுவனங்களே சுதந்திரமாக முடிவு செய்யலாம். பைலட்களின் சீருடைகளுக்கு எது பேன்ஸியாக பொருந்துகிறதோ, அதனை விமான நிறுவனங்கள் தேர்வு செய்கின்றன. எனவே மஞ்சள் என்பது பொதுவாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வண்ணம்தான்.

பைலட்களின் தோள்பட்டையில் உள்ள மஞ்சள் கோடுகள் எதை குறிக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே...

பைலட்களின் தோள்பட்டையில் மஞ்சள் தவிர்த்து, வெள்ளை நிற கோடுகளையும் நீங்கள் காண முடியும். இந்த வண்ணங்கள் விமான நிறுவனங்களை பொறுத்து மாறுபட்டாலும், கோடுகள் குறிக்கும் அடிப்படை அர்த்தம் ஒன்றுதான். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What Do The Stripes On A Commercial Airplane Pilot's Uniform Mean? We Explain. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X