வாகனங்களின் டயர்கள் வட்ட வடிவில் இருப்பதற்கு காரணம் இதுதான்... இதுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?

வாகனங்களின் டயர்கள் ஏன் வட்ட வடிவில் இருக்கின்றன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகனங்களின் டயர்கள் வட்ட வடிவில் இருப்பதற்கு காரணம் இதுதான்... இதுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?

வாகனத்தின் மிக முக்கியமான பாகங்களில் டயர்களும் ஒன்றாக உள்ளன. டயர்களை பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும், டயர்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த தகவல்களையும், கடந்த காலங்களில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.

வாகனங்களின் டயர்கள் வட்ட வடிவில் இருப்பதற்கு காரணம் இதுதான்... இதுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?

இந்த வகையில் டயர்களை பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான தகவலைதான் இன்று நாம் பார்க்க போகிறோம். பொதுவாக வாகனங்களின் டயர்கள் வட்ட வடிவில்தான் இருக்கும். சதுர வடிவிலோ அல்லது செவ்வக வடிவிலோ இருக்காது. அது ஏன்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வாகனங்களின் டயர்கள் வட்ட வடிவில் இருப்பதற்கு காரணம் இதுதான்... இதுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?

முதல் காரணம் வேகம். வாகனங்கள் வேகமாக செல்ல வேண்டுமென்றால், டயர்கள் வட்ட வடிவில்தான் இருக்க வேண்டும். உங்கள் வாகனத்திற்கும், சாலைக்கும் இடையே இருக்கும் ஒரே ஒரு தொடர்பு டயர்கள் மட்டும்தான். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு உங்கள் வாகனம் வேகமாக செல்வதை வட்ட வடிவில் இருக்கும் டயர்கள் உறுதி செய்கின்றன.

வாகனங்களின் டயர்கள் வட்ட வடிவில் இருப்பதற்கு காரணம் இதுதான்... இதுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?

'ரோலிங்' மூலமாக டயர்கள் நகர்கின்றன. ரோலிங் வேகமாக நடக்க வேண்டுமென்றால், அதற்கு வட்ட வடிவம்தான் மிகவும் பொருத்தமானது. அதே நேரத்தில் சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்கள் விளிம்புகளை கொண்டிருக்கும் என்பதால், அவை சாலையை சேதப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அத்துடன் இந்த பண்பு நகர்வதை மெதுவாக மாற்றி விடும்.

வாகனங்களின் டயர்கள் வட்ட வடிவில் இருப்பதற்கு காரணம் இதுதான்... இதுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?

வட்டத்துடன் ஒப்பிடும்போது, சதுரம், செவ்வகம் ஆகிய வடிவங்கள், ரோலிங்கிற்கு ஏற்றவை அல்ல. டயர்கள் வட்ட வடிவில் இருப்பதற்கு மற்றொரு காரணம் மைலேஜ். ஆம், டயர்கள் வட்டமாக இல்லாவிட்டால் சிறப்பான மைலேஜ் கிடைக்காது. உங்கள் வாகனத்தின் டயர்கள் சாலையில் உருண்டு உங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து செல்லும்போது, சாலைகள் வழங்கும் உராய்வு சக்தியை வெல்ல வேண்டும்.

வாகனங்களின் டயர்கள் வட்ட வடிவில் இருப்பதற்கு காரணம் இதுதான்... இதுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?

இதனை ரோலிங் ரெஸிஸ்டன்ஸ் (Rolling Resistance) என்கின்றனர். இதற்கும் வாகனத்தின் மைலேஜிற்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது. ரோலிங் ரெஸிஸ்டன்ஸ் அதிகமாக இருக்கும்போது, உங்கள் வாகனம் நகர்வதற்கு அதிக எரிபொருளை எடுத்துக்கொள்ளும். எனவே வாகனத்தின் மைலேஜ் வீழ்ச்சியடையும்.

வாகனங்களின் டயர்கள் வட்ட வடிவில் இருப்பதற்கு காரணம் இதுதான்... இதுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?

இருக்கின்ற வடிவங்களிலேயே வட்ட வடிவம்தான் குறைவான ரோலிங் ரெஸிஸ்டன்ஸை வழங்கும். ஏனெனில் பொதுவாக வட்ட வடிவம் 'ஸ்மூத்' ஆக ரோல் ஆகும். ஆனால் மற்ற வடிவங்கள் ரோல் ஆவதற்கு அதிக எனர்ஜி தேவைப்படும். அதிக எனர்ஜி தேவைப்படுகிறது என்றால், அதிக எரிபொருள் செலவாகும் என அர்த்தம். எனவே எரிபொருள் நுகர்வு அதிகரித்து மைலேஜ் குறைந்து விடும்.

வாகனங்களின் டயர்கள் வட்ட வடிவில் இருப்பதற்கு காரணம் இதுதான்... இதுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?

இங்கே மற்றொரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். தற்போது இருக்கும் வட்ட வடிவ டயர்களிலேயே, புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி, ரோலிங் ரெஸிஸ்டன்ஸை இன்னும் குறைப்பதற்கு, டயர் உற்பத்தி நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இதன் காரணமாக வாகனம் இன்னும் சிறப்பான மைலேஜை வழங்கும்.

வாகனங்களின் டயர்கள் வட்ட வடிவில் இருப்பதற்கு காரணம் இதுதான்... இதுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?

தற்போதே பெட்ரோல், டீசல் விலையை நம்மால் சமாளிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு மிகவும் அதிகமான விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாகி கொண்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், டயர்கள் மட்டும் வட்ட வடிவில் இல்லாவிட்டால், எரிபொருள் தற்போது செலவிடும் தொகையை விட, நீங்கள் இன்னும் அதிகமான தொகையை செலவிட வேண்டியிருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why Are Your Car Tyres Circular? Important Reasons. Read in Tamil
Story first published: Friday, July 30, 2021, 15:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X