கார் சக்கரங்கள் வேகமாக சுழல்கையில் பின்பக்கமான சுழல்வது போல் தெரிவது ஏன்?

Posted By: Staff

கார்கள் வேகமாகச் செல்லும் போது அதன் சக்கரங்கள் பின்புறமாக சுழல்வது போல கண்டிருப்பீர்கள். ஏன் அவ்வாறு தோன்றுகிறது என இதுவரை நினைத்ததுண்டா?. அதன் காரணத்தை இப்போது அறிந்துகொள்வோம்.

காரின் சக்கரங்கள் பின்பக்கமாக சுழல்வது போல் தெரிவது ஏன்?

உண்மையில் சக்கரங்கள் முன்பக்கமாகவே சுழல்கின்றன. பின்பக்கமாக எந்த சக்கரங்களும் சுழல்வதில்லை. நமக்கு இப்படி தோன்றுவதற்கு காரணம் "Stroboscopic Effect" என்ற விளைவு நம் கண்ணில் ஏற்படுவது தான்.

காரின் சக்கரங்கள் பின்பக்கமாக சுழல்வது போல் தெரிவது ஏன்?

நமது மனிதக் கண்ணில் ஏற்படும் "persistence of vision" என்ற பார்வை நிலைத்தன்மை காரணமாக இப்படி நமக்கு தோன்றுகிறது. குழப்பமாக உள்ளதெனில் சற்று விரிவாக காணலாம்.

காரின் சக்கரங்கள் பின்பக்கமாக சுழல்வது போல் தெரிவது ஏன்?

சக்கரங்கள் மட்டும் அல்ல பறக்கும் ஹெலிகாப்டரில் உள்ள பிளேடுகள் சுழலும் போதும் கூட இதே போன்ற உணர்வே நமக்கு ஏற்படும். இதற்கு காரணம் மனிதக் கண்களால் சுழலக்கூடிய பொருளின் அனைத்து பகுதியையும் பார்க்க இயலாது.

காரின் சக்கரங்கள் பின்பக்கமாக சுழல்வது போல் தெரிவது ஏன்?

சுழலும் பொருட்களை காணும் கண்கள், நொடிக்கு 10 முதல் 12 என்ற ஃபிரேம் கணக்கில் புள்ளியிட்ட கோடுகளாக அப்பொருளை கிரகித்து அப்புள்ளிகளுக்கு நிழற்படமாக உருவம்கொடுத்து அதனை மூளைக்கு அனுப்புகிறது.

காரின் சக்கரங்கள் பின்பக்கமாக சுழல்வது போல் தெரிவது ஏன்?

சமயோசிதமாக செயல்படும் மூளை அந்த கோடுகளுக்கு இணைப்பு கொடுக்கிறது, இது தொடர்ந்து சுழலும் போது எதிர்மறை சுழற்சியாக நமக்கு தோன்றுகிறது.

காரின் சக்கரங்கள் பின்பக்கமாக சுழல்வது போல் தெரிவது ஏன்?

ஆக, காரின் சக்கரமோ அல்லது ஹெலிகாப்டரின் பிளேடுகள் சுழலும் போதோ இதே போன்றதொரு மாயையை நம் மூளை உருவாக்குகிறது. நம் கண்கள் காணும் பொருள் எதிர்திசையில் சுழல்வது போன்றோ, அல்லது இயல்பான வேகத்தை விட அதிகமாகவோ அல்லது சுழற்சியே இல்லாதது போன்றோ தோன்றும்.

காரின் சக்கரங்கள் பின்பக்கமாக சுழல்வது போல் தெரிவது ஏன்?

பொருளின் சுழற்சி வேகம் அதிகரிக்கும் போது சுழற்சி திசையும் மாறும், இது எதிர்திசை அல்லது பின்னோக்கி சுழல்வது போல தோன்றச் செய்யும்.

புதிதாக அறிமுகமாகியுள்ள 2017 கேடிஎம் ஆர்சி16 பைக்கின் படங்கள்: 

English summary
Here’s the explanation as to why car wheels appear to spin backwards when travelling fast.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark