இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்...?

சாலைகளில் இடது மற்றும் வலது என வாகனங்கள் செல்வதற்கான நடைமுறை ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடுகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இடதுபுறமாக வாகனங்கள் செல்லும் நடைமுறை பின்பற்றப்படும் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வாகனங்கள் சாலையின் வலதுபுறத்தில் செல்லும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்த நடைமுறை எவ்வாறு ஏற்பட்டது? இதற்கான காரணங்கள் என்ன என்று ஆராய்ந்தபோது பல சுவாரஸ்யங்கள் பொதிந்து கிடக்கின்றன. அந்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்...?

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் சாலையின் இடதுபக்கத்தை பயன்படுத்தும் நடைமுறையை கொண்டிருக்கின்றன என்ற எளிதான பதிலை அளித்துவிட முடியும். ஆனால், அந்த வழக்கம் எவ்வாறு வந்தது என்பது குறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

 இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்...?

உலகின் 65 சதவீத நாடுகள் சாலையின் வலது பக்கத்தை பயன்படுத்தும் நடைமுறையை வழக்கமாக கொண்டுள்ளன. அந்த வழக்கத்தை அறிந்து கொள்வதற்கு வரலாற்றை சற்று திரும்பி பார்க்க வேண்டியிருக்கிறது.

 இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்...?

உலகின் மிகமோசமான வன்முறை நிறைந்த காலக்கட்டமாக பார்க்கப்படும் இடைக்கால வரலாற்றில் குதிரைகளில் செல்வோர் இடதுபக்கத்தை பயன்படுத்தி உள்ளனர். அதற்கான முக்கிய காரணம், சட்டம் ஒழுங்கு மிக மோசமான அந்த காலத்தில் சாலையில் எதிர் திசையில் வரும் எதிரிகள் தாக்கும் அபாயம் இருந்தது.

 இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்...?

அப்போது இடுப்பில் சொருகியிருக்கும் வாள் மற்றும் அம்பு உள்ளிட்ட ஆயுதங்களை வலது கை மூலமாக பயன்படுத்தி எதிர் தாக்குதல் நடத்தும் விதமாக இடது பக்கமாக செல்லும் வழக்கத்தை கொண்டிருந்தனராம். மற்றொரு காரணம், எதிரில் வருபவர்களுக்கு கைகுலுக்குவதற்காக என்றும் கூறப்படுகிறது.

 இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்...?

அந்த காலத்திலேயே போப் ஆண்டவர் சாலையில் இடதுபுறமாக பயன்படுத்தும் வழக்கத்தை மேற்கொள்ளுமாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டதாகவும் தகவல் உண்டு. உலகின் 75 சதவீத மக்கள் வலது கை பழக்கம் உடையவர்கள் என்பதால், சாலையில் இடதுபுறமாக பயன்படுத்துவதும் அதிகரித்தது.

 இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்...?

1789-99 இடைப்பட்ட காலக்கட்டத்தில் பிரெஞ்சு புரட்சி வெடித்து, அந்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அந்நாட்டில் பல்வேறு சீர்த்திருந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

 இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்...?

அப்போது, அரசாட்சி மற்றும் திருச்சபை அதிகார முறைமைகளின்படி இருந்த இடதுபக்க பயன்பாட்டிற்கு எதிராக சாலையில் வலது பக்க பயன்பாட்டு முறை வழக்கத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், நெப்போலியன் பிடித்த ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வலதுபக்க நடைமுறை பயன்பாட்டுக்கு புகுத்தப்பட்டது.

 இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்...?

அடுத்து, அமெரிக்க கண்டத்தில் வலது பக்கம் பயன்பாட்டு முறைக்கான வரலாற்றுத் தகவல்களும் சுவாரஸ்யம் மிகுந்ததாக உள்ளது. அங்கு விவசாய பொருட்களை குதிரைகள் பூட்டிய பெரிய வண்டிகளில் ஏற்றிச் செல்வது வழக்கம். அந்த வண்டிகளில் குதிரைகளை கட்டுப்படுத்தி ஓட்டிச் செல்பவருக்கான இடவசதி இல்லை.

 இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்...?

இதனால், இடதுபக்கம் பூட்டப்பட்டிருக்கும் குதிரையில் வண்டி ஓட்டுபவர் ஏறி அமர்ந்து கொள்வாராம். அத்துடன், பள்ளம் மேடான சாலைகளில் வண்டி செல்லும்போது, சாலையோர பள்ளத்தில் விழுந்துவிடுவோம் என்ற அச்சம் காரணமாக, வண்டியை வலது பக்கத்தில் ஓட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனராம். அதுவே மோட்டார் வாகனங்களுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது.

 இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்...?

அதேநேரத்தில், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் குதிரை வண்டிகளில் ஓட்டுபவருக்கு தனி இடம் இருக்குமாம். அதன்பிறகு, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள் வலது பக்கத்தை பயன்படுத்தினாலும், வலது பக்க ஸ்டீயரிங் அமைப்புடன் வந்தன. முதல்முறையாக ஃபோர்டு மாடல் டி கார் இடதுபக்கம் ஸ்டீயரிங் வீல் கொண்டதாக தயாரிக்கப்பட்டது.

 இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்...?

அதுவே வலது பக்க பயன்பாட்டு நடைமுறை கொண்ட நாடுகளுக்கு ஏதுவானதாக கருதி பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அதேநேரத்தில், பிரிட்டனும், அதன் காலனி ஆதிக்க நாடுகளும் தொடர்ந்து இடதுபக்க சாலையில் செல்லும் நடைமுறையை பயன்படுத்தியதோடு, வலது பக்க ஸ்டீயரிங் அமைப்பு கொண்ட கார்களை பயன்படுத்தின.

 இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்...?

இடது மற்றும் வலப்பக்கம் சாலையை பயன்படுத்தும் நடைமுறைக்காக பல நாடுகள் சட்டங்களை இயற்றின. 1792ம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் சாலையின் வலது பக்கத்தை பயன்படுத்துமாறும், 1804ம் ஆண்டு நியூயார்க் நகரில் சாலையை வலதுபக்கம் பயன்படுத்துமாறும் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.

 இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்...?

ரஷ்யா, போர்ச்சுகள் உள்ளிட்ட நாடுகளும் வலதுபக்கத்துக்கு மாறின. பிரதமர் நரேந்திர மோடி 500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு போட்ட உத்தரவு போன்றே, 1938ம் ஆஸ்திரியாவை பிடித்த ஜெர்மனி நாட்டு சர்வாதிகாரி ஹிட்லர், அந்நாட்டில் உடனடியாக சாலையில் வாகனங்கள் வலது பக்கத்தை பயன்படுத்த உத்தரவிட்டார்.

 இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்...?

கால அவகாசம் எதுவும் இல்லாமல் போடப்பட்ட ஹிட்லரின் உத்தரவால், ஆஸ்திரியாவில் வாகன ஓட்டிகளிடையே பெரும் குழப்பமும், பிரச்னையும் ஏற்பட்டது. கடைசியாக ஸ்வீடன் நாடுதான் வலதுபக்க சாலை பயன்பாட்டு நடைமுறைக்கு மாறியதாக தகவல் இருக்கிறது.

 இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்...?

1924ம் ஆண்டு ஜப்பான் நாடு இடதுபக்கம் செல்வதற்கான சட்டம் இயற்றியது. எந்தவொரு காலனி ஆதிக்கத்திலும் சிக்காவிட்டாலும், அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட நெடுஞ்சாலைப் பணிகளில் பிரிட்டிஷ் பொறியாளர்களே ஈடுபட்டனர்.

 இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்...?

இதனால், அவர்கள் தங்களது சொந்த நாட்டில் இருப்பது போன்றே, ஜப்பானிலும் சாலையின் இடதுபக்கம் வாகனங்கள் செல்வதற்கான கட்டமைப்புடன் சாலைகளை உருவாக்கினர்.

 இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்...?

இடம் போனால் என்ன? வலம் போனால் என்ன? அடுத்தவருக்கு தொந்தரவு தராமலும், பாதுகாப்பாகவும் பயணித்தால் சரி.

உலகின் அதிவேக பொது நெடுஞ்சாலை... ஆட்டோபான் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

உலகில் இன்றைக்கு அமைக்கப்படும் பல அதிவிரைவு சாலைகளுக்கு முன்மாதிரியாகவும், முன்னோடியாகவும் கருதப்படுவது ஜெர்மனியிலுள்ள ஆட்டோபான் அதிவிரைவு நெடுஞ்சாலை கட்டமைப்பு குறிப்பிடப்படுகிறது.

இந்த ஆட்டோபான் நெடுஞ்சாலை கட்டமைப்பு அமையப்பெறுவதில் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் பங்கும் முக்கியமானது. ராணுவ தளவாடங்களையும், படை வீரர்களையும் நாட்டின் எல்லைகளுக்கு விரைவாக அனுப்புவதுற்கு இந்த சாலைகள் அவசியம் என ஹிட்லர் கருதி இந்த சாலைகளை அமைப்பதில் தீவிரம் காட்டினார்.

Photo Credit: Vladislav Bezrukov

உலகின் அதிவேக பொது நெடுஞ்சாலை... ஆட்டோபான் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

1930ம் ஆண்டு இந்த சாலை கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் துவங்கியது. தற்போது உலகின் அதிவேக பொது பயன்பாட்டு அதிவிரைவு சாலை கட்டமைப்பும் இதுவாகவே கருதப்படுகிறது. தவிர, ஆட்டோமொபைல் பிரியர்கள் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது ஜெர்மனியின் ஆட்டோபான் நெடுஞ்சாலையில் பயணிக்க விரும்புகின்றனர்.

Picture Credit: Wikipedia

உலகின் அதிவேக பொது நெடுஞ்சாலை... ஆட்டோபான் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

கட்டுப்பாடுகள் அதிவிரைவு சாலைக்கான கட்டமைப்பு வசதிகளை சேர்த்து இந்த சாலைகளில் பயணிப்பதற்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மற்றும் அபராதங்களை விதிக்கின்றனர்.

Picture Credit: Wikipedia

உலகின் அதிவேக பொது நெடுஞ்சாலை... ஆட்டோபான் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

1935ம் ஆண்டு 108 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட்ட ஜெர்மனியின் ஆட்டோபான் அதிவிரைவு சாலை கட்டமைப்பு தற்போது 12,845 கிமீ நீளம் கொண்டதாக மாறியிருக்கிறது. உலகிலேயே அதிக நீளம் கொண்ட சீனாவின் 97,355 கிமீ நீளம் கொண்ட அதிவிரைவு சாலை கட்டமைப்பு, அமெரிக்காவின் 75,932 கிமீ நீளம் கொண்ட அதிவிரைவு சாலைக் கட்டமைப்புகளின் பட்டியலில் சிறப்பான கட்டமைப்பையும் கொண்டதாக வர்ணிக்கப்படுகிறது.

உலகின் அதிவேக பொது நெடுஞ்சாலை... ஆட்டோபான் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

இந்த சாலையில் வேகக்கட்டுப்பாடு கிடையாது. அதேநேரத்தில், பராமரிப்பு பணிகள், மோசமான சீதோஷ்ண நிலைகளின்போது குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் வேகக்கட்டுபாடு தற்காலிகமாக அமல்படுத்தப்படும். இந்த சாலையில் பயணிக்க 130 கிமீ வேகம் பரிந்துரைக்கப்பட்ட வேகமாக கடைபிடிக்கப்படுகிறது. மொத்த ஆட்டோபான் சாலைகளில் 33 சதவீத சாலைகளில் வேகக்கட்டுப்பாடு அமலில் உள்ளது. இதன் 15 சதவீத சாலைகளில் சீதோஷ்ண நிலை, பராமரிப்பு பணிகள் போன்றவற்றிற்காக தற்காலிக வேகக்கட்டுப்பாடு அமலில் இருக்கும். வாகனங்களை பொறுத்து வேகக்கட்டுப்பாடு அமலில் உள்ளது.

Picture Credit: Wikipedia

உலகின் அதிவேக பொது நெடுஞ்சாலை... ஆட்டோபான் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களுக்கு வேகக்கட்டுப்பாடு இல்லை. ஆனால், இருக்கை எண்ணிக்கைக்கு அதிகமான பயணிகளை ஏற்றி பஸ்களுக்கு 60 கிமீ வேகமும், டிரெய்லர்களுக்கு 80 கிமீ வேகமும், இருக்கை எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் உள்ள பயணிகள் ஏற்றி பஸ்களுக்கு 100 கிமீ வேகக் கட்டுப்பாடும் கொடுக்கப்பட்டுள்ளது.

நம்மூரில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு எண் கொடுக்கப்பட்டுள்ளது போன்றே ஆட்டோபான் சாலைகளுக்கு பிரத்யேக எண்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏ10 முதல் ஏ99 வரையிலான எண்களில் அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியில் இருக்கும் ஆட்டோபான் அதிவிரைவு சாலைகளுக்கு குறிப்பிட்ட எண்களில் அழைக்கப்படுகின்றன. இதில் ஜெர்மனியின் தெற்கிலிருந்து மேற்கு பகுதியை இணைக்கும் ஏ5 மற்றும் கிழக்கு- மேற்கு பகுதிகளை இணைக்கும் ஏ8 ஆகிய ஆட்டோபான் நெடுஞ்சாலைகள் ஜெர்மனியின் முக்கிய ஆட்டோபான் சாலைகளாக குறிக்கப்படுகின்றன.

Photo Credit: Vladislav Bezrukov

உலகின் அதிவேக பொது நெடுஞ்சாலை... ஆட்டோபான் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

இருவழித்தடங்கள் மற்றும் 4 வழித்தடங்கள் கொண்டதாக இருக்கின்றன. சில முக்கிய ஆட்டோபான் சாலைகளில் ஒரு பக்கத்திற்கு தலா 4 வழித்தடங்கள் மற்றும் அவசர கால வழித்தடத்துடன் ஆட்டோபான் அதிவிரைவு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாகன ஓட்டிகளின் அவசர அழைப்பிற்காக இந்த நெடுஞ்சாலையில் 16,000 தொலைபேசிகள் வைக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு 700 அழைப்புகள் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Picture Credit: Wikipedia

உலகின் அதிவேக பொது நெடுஞ்சாலை... ஆட்டோபான் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

இந்த நெடுஞ்சாலை கட்டமைப்பு முழுவதும் வாகன ஓட்டிகள் ஓய்வு எடுப்பதற்கான இடம் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆட்டோபான் சாலைகளல் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்பது கட்டாய விதி. மேலும், ஓய்விடங்கள் மற்றும் எரிபொருள் நிலையங்கள் குறித்த பலகைகள் சாலைகளில் முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் வகையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

2012ம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி ஜெர்மனியின் 31 சதவீத போக்குவரத்து தேவையை ஆட்டோபான் பகிர்ந்து கொள்கிறது. அதேபோன்று, ஜெர்மனியில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் 11 சதவீதம் ஆட்டோபான் சாலைகளில் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Photo Credit: Wikipedia

Most Read Articles

Tamil
English summary
India drives on the left side of the road while most of the world drives on the other side. A history lesson is needed to find the right answer.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more