பஸ்களில் சீட் பெல்ட் கொடுக்கப்படுவதில்லை... ஏன் தெரியுமா?

Written By:

கார் உள்ளிட்ட வாகனங்களில் சீட் பெல்ட் அணிந்து செல்வது பல நகரங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விபத்து சமயங்களில் சீட் பெல்ட் உயிர் காக்கும் ஆயுதமாக கருதப்படுகிறது. இதனால், சீட் பெல்ட் அணிந்து செல்வது குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது.

 பஸ்களில் சீட் பெல்ட் கொடுக்கப்படுவதில்லை... ஏன் தெரியுமா?

அதிக பயணிகளுடன் செல்லும் பஸ்களில் சீட் பெல்ட் கொடுக்கப்படுவதில்லை. இதுகுறித்து அவ்வப்போது விமர்சனங்கள் எழுவதுண்டு.

பஸ்களில் சீட் பெல்ட் கொடுக்கப்படாததற்கான காரணங்கள் குறித்து ஆய்வுகளும், நிபுணர்களும் கூறும் சில கருத்துக்களை இந்த செய்தியில் பார்க்கலாம். ஆனால், உண்மையான காரணங்கள் குறித்து நாம் மேற்கொண்ட சில விஷயங்களையும் இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

 பஸ்களில் சீட் பெல்ட் கொடுக்கப்படுவதில்லை... ஏன் தெரியுமா?

பஸ்களை இரு வகைப்படுத்தி, அதில் சீட் பெல்ட் கொடுக்கப்படாததன் காரணங்கள் சொல்லப்படுகின்றன. நகர்ப்புறத்தில் இயக்கப்படும் பஸ்கள் அதிக வேகத்தில் செல்வதில்லை. எனவே, சீட் பெல்ட் தேவைப்படுவதில்லை.

 பஸ்களில் சீட் பெல்ட் கொடுக்கப்படுவதில்லை... ஏன் தெரியுமா?

றைந்த தூரமே பயணிக்கும்போது சீட் பெல்ட் இருந்தால், அது அசகவுரியத்தை ஏற்படுத்துவதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. நகர்ப்புற பஸ்கள் வேகம் குறைவு. அப்படியே விபத்தில் சிக்கினாலும், பயணிப்பவர்களுக்கு பெரிய அளவிலான காயங்கள் ஏற்படுவது இல்லை என்பதும் தவிர்க்கப்பட காரணமாக சொல்லப்படுகிறது.

 பஸ்களில் சீட் பெல்ட் கொடுக்கப்படுவதில்லை... ஏன் தெரியுமா?

அடுத்து, பஸ்களின் இருக்கை அமைப்பு சிறிய அறைகளில் நெருக்கடியாக அமர்ந்திருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, முட்டைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்லப் பயன்படும் தட்டு போன்றுதான் இந்த பஸ் இருக்கைகளின் அமைப்பும் கூறப்படுகிறது.

 பஸ்களில் சீட் பெல்ட் கொடுக்கப்படுவதில்லை... ஏன் தெரியுமா?

இதுபோன்ற அமைப்பு காரணமாக, பயணிகள் பெரும்பாலும் பாதுகாப்பாகவே பயணிக்க முடியும் என்று போக்குவரத்துத் துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இரண்டாவதாக, நீண்ட தூர பஸ்களில் பெரும்பாலும், ஹெடெக் பாடி அமைப்புடன் கட்டப்படுகிறது.

 பஸ்களில் சீட் பெல்ட் கொடுக்கப்படுவதில்லை... ஏன் தெரியுமா?

அதாவது, பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதி அதிக உயரத்தில் இருக்கிறது. இதனால், விபத்தில் சிக்கினாலும், பயணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை. அதேசமயத்தில், எதிரில் வரும் கார் போன்ற வாகனங்கள் அதிக பாதிப்பை சந்திக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

 பஸ்களில் சீட் பெல்ட் கொடுக்கப்படுவதில்லை... ஏன் தெரியுமா?

இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் கார் உள்ளிட்ட வாகனங்கள் உயரம் மிக குறைவாக இருப்பதால், எதிரில் வரும் வாகனங்களுடன் மோதும்போது அதிக பாதிப்பை சந்திக்கின்றன. ஆனால், பஸ் போன்ற கனரக வாகனங்கள் அதிக பாதிப்பை சந்திப்பதில்லை. எனவே, சீட் பெல்ட் தேவையில்லை என்ற கருத்து நிலவுகிறது.

 பஸ்களில் சீட் பெல்ட் கொடுக்கப்படுவதில்லை... ஏன் தெரியுமா?

பஸ்களில் சீட் பெல்ட் கொடுக்கப்படாதது குறித்து அண்மையில் வெளிவந்த ஆய்வு முடிகளில் சில உண்மைகள் அம்பலமாகி உள்ளன. சீட் பெல்ட் கொடுக்கப்படாததற்கு நடைமுறை காரணங்கள் பல இருந்தாலும் அல்லது சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம், தயாரிப்பு செலவீனத்தை குறைப்பதுதான் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 பஸ்களில் சீட் பெல்ட் கொடுக்கப்படுவதில்லை... ஏன் தெரியுமா?

அதாவது, ஒரு பஸ்சில் சீட் பெல்ட்டுகளை கொடுப்பதற்கு சில லட்சங்கள் வரை கூடுதல் செலவாகும். அதேபோன்று, சீட் பெல்ட் கொடுக்கும்போது இருக்கைளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய அவசியம் வரும்.

 பஸ்களில் சீட் பெல்ட் கொடுக்கப்படுவதில்லை... ஏன் தெரியுமா?

இதனாலேயே பல தயாரிப்பு நிறுவனங்கள் பஸ்களில் சீட் பெல்ட் கொடுப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மேலும், சீட் பெல்ட் கொடுப்பதனால், பஸ்களின் பாதுகாப்பு பெரிய அளவில் மேம்பட்டுவிடும் என்றும் கூற முடியாது என்பதும் ஒரு கருத்தாக முன் வைக்கப்படுகிறது.

 பஸ்களில் சீட் பெல்ட் கொடுக்கப்படுவதில்லை... ஏன் தெரியுமா?

இந்த காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும், பஸ்களில் சீட் பெல்ட் கொடுக்கப்படுவது அவசியமானதாகவே கூறலாம். நகர்ப்புற பஸ்களில் சில நடைமுறை காரணங்கள் ஒப்புக் கொள்ளும் வகையில் இருந்தாலும், தொலைதூர பஸ்களிலும், சொகுசு பஸ்களிலும் இந்த வசதி மிக அவசியமானதாகவே பார்க்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்து.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Why Don't Buses Have Seatbelts?
Story first published: Tuesday, July 4, 2017, 17:07 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos