Just In
- 41 min ago
இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க
- 1 hr ago
எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவுகள் துவக்கம்!! இந்தியாவின் முதல் செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ கார்..!
- 1 hr ago
பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... முக்கிய விபரங்கள் வெளியானது
- 3 hrs ago
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
Don't Miss!
- Movies
என்னை தேவதையாக்கிய தாய்மை.. நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய 'எருமை சாணி' ஹரிஜா!
- News
நிலக்கோட்டையின் கலவர நிலவரம்.. சமாளிப்பாரா அதிமுக வேட்பாளர் எஸ்.தேன்மொழி?
- Lifestyle
நீங்க சாப்பிடும்போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப அது பிங் உணவுக் கோளாறா இருக்கலாமாம்... ஜாக்கிரதை..!
- Sports
900 விக்கெட்டுகளை பூர்த்தி செஞ்சிருக்காரு ஆண்டர்சன்... மெக்கிராத்,அக்ரம் வரிசையில் 3வது வீரராக சாதனை
- Finance
மார்ச் 31க்கு முன் கட்டாயம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாழ்வில் ஒருமுறையாவது ஏர்பஸ் ஏ380 விமானத்தில் பறந்துவிட வேண்டும்... ஏன் தெரியுமா?
நீங்கள் எத்தனை விமானங்களில் பயணித்திருந்தாலும், அந்த விமானங்களைவிட ஒருபடி மேலே சுகானுபவத்தை தரும் மாடலாக ஏர்பஸ் ஏ380 விமானத்தை குறிப்பிடலாம்.

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமான மாடலாக வலம் வரும் ஏர்பஸ் ஏ380 விமானத்தில் பயணிப்பது பலரின் வாழ்நாள் கனவாகவும் இருக்கிறது.
பிற விமானங்களைவிட ஏர்பஸ் ஏ380 விமானத்தில் பயணிக்கும்போது கிடைக்கும் கூடுதல் வசதிகள், பாதுகாப்பு அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஒரு பெரிய திருமண மண்டபம் அளவுக்கு இடவசதியும், இருக்கை வசதியுடன் பறக்கும் இந்த பிரம்மாண்ட விமானத்தில் ஏறும்போதே, பாதுகாப்பு குறித்த அச்சம் கொள்ள தேவையில்லை. இந்த விமானத்தில் நான்கு எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது.

4 எஞ்சின்கள் கொண்ட இந்த விமானத்தில், சில எஞ்சின்கள் செயல் இழந்தாலும், விமானத்தை பாதுகாப்பாக தரை இறக்கிவிடலாம். குறிப்பாக, கடல் மார்க்கமாக பயணிக்கும்போது இந்த விமானம் மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. மேலும், இதுவரை விபத்தில் சிக்கியதில்லை என்பதையும் நினைவில் வைக்கவும்.

ஏர்பஸ் ஏ380 விமானத்தை மிகவும் அனுபவம் வாய்ந்த விமானிகளை கொண்டு இயக்கப்படுகிறது. இதனால், மிகவும் பாதுகாப்பான முறையில் செலுத்தப்படுவதும், மிக மிக நவீன கட்டுப்பாட்டு நுட்பங்களையும், பாதுகாப்பையும் இந்த விமானங்கள் பெற்றிக்கின்றன.

இந்த விமானத்தில் பயணிக்கும் பலருக்கும் ஏறுவதும், இறங்குவதும் தெரியாத அளவிற்கு மிக உன்னதமான பயணத்தை வழங்கும். விமானத்தில் எழுந்து செல்லும்போது சாதாரணமாக வீட்டில் இருப்பது போன்ற ஒரு விசாலமான இடத்தில் இருக்கும் உணர்வை தரும்.

இதுவரை உருவாக்கப்பட்ட பயணிகள் விமானங்களில் அதிர்வுகளும், சப்தமும் குறைவான விமான மாடலாகவும் ஏர்பஸ் ஏ380 வர்ணிக்கப்படுகிறது. இதனை ஒவ்வொரு பயணியும் குறிப்பிடும் முக்கிய விஷயமாக இருக்கிறது. இவ்வளவு பிரம்மாண்ட விமானம், இந்தளவு சிறப்பான சப்த தடுப்பு அமைப்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மிகச் சிறப்பான காற்று சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை இந்த விமானம் பெற்றிருக்கிறது. இதைவிட மிக முக்கிய பாதுகாப்பு விஷயம், சிறிய விமானங்கள் டர்புலென்ஸ் எனப்படும் காற்று வீச்சில் ஏற்படும் சீரற்ற போக்கால் ஏற்படும் அசாதரண நிலைகளில் அதிக அதிர்வுகள், குலுங்கல்களை சந்திக்கும். ஆனால், இந்த விமானம் டர்புலென்ஸ் காரணமாக அதிக பாதிப்பை சந்திக்காது.

குறிப்பாக, அந்த விமானத்தின் சூட் அறைகளில் பயணிப்பது மிக உன்னதமான பயண அனுபவத்தை வழங்குவதாகவே இருக்கும். 7 நட்சத்திர ஓட்டல் அறைகளுக்கு இணையான வசதிகளை இந்த அறைக்குள் அடக்கி இருக்கின்றனர்.

அலுங்கள், குலுங்கல் இல்லாமல் விரைவாக பயணித்தாலும், பல விமான மாடல்களில் இருக்கைகள் மிக நெருக்கடியான விஷயமாகவே இருக்கின்றன. ஆனால், ஏர்பஸ் ஏ380 விமானத்தின் இருக்கைகள் மிக சொகுசாகவும், கூடுதல் சவுகரியம் கொண்டதாகவும் கொடுக்கப்படுகின்றன.

சாதாரண வகுப்பு இருக்கைகள் கூட கால் வைப்பதற்கு அதிக இடவசதியையும், அடுத்தவருடன் இடித்துக் கொண்டு அமர்ந்து செல்லும் நெருக்கடி இல்லாமலும் சவுகரியமாகவும் இருக்கின்றன. இருக்கைகளில் பெரிய அளவுடைய பொழுதுபோக்குக்கான டிவி திரைகள் கொடுக்கப்படுகின்றன. இதனால், கண்களுக்கு ரிலாக்ஸ்டாக டிவியை பார்க்கும் உணர்வை தரும்.

ஏர்பஸ் ஏ380 விமானத்தில் கீழ் தளத்தில் அதிகபட்சமாக 399 பயணிகள் வரை செல்ல முடியும். ஆனால், அதிக கழிவறைகள் கொடுக்கப்பட்டிருப்பதால், மிக நீண்ட தூரம் பயணிக்கும்போது க்யூவில் நிற்கும் அவசியம் இல்லை.

பயணிகளுக்கு கையில் எடுத்து வரும் உடைமைகளை வைப்பதற்கான அறைகளும் மிகப்பெரியது. இந்த விமானத்தில் இருக்கும் தனித்துவமான வசதி, விமானம் செல்லும்போது பின்புறம், கீழ்புறம், முன்புறத்தை உங்களுக்கு முன்னால் இருக்கும் திரை மூலமாக வெளிப்புற அழகை காணும் பாக்கியத்தை வழங்குகிறது.

இந்த விமானத்தில் பறப்பவர்களுக்கு சில குறைகளும் உண்டு. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட பயணிகள் ஏறுவதால், அதிக நேரம் பிடிக்கும். இதுதவிர்த்து, இறக்கை அமைப்பை மிக பெரியதாக இருப்பதால், இறக்கையை ஒட்டி இருக்கும் இருக்கைகளில் அமர்பவர்கள் வெளிப்புறத்தை பார்ப்பதற்கு கடினமாக இருக்கும்.

உடல்கூடு அமைப்பை விட்டு சற்று தள்ளி இருக்கைகள் அமைக்கப்பட்டு இருப்பதால், ஜன்னல் ஓர இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் கூட சற்றே சிரத்தை எடுத்து வெளிப்புறத்தை பார்க்க முடியும்.

டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய விமான நிலையங்களில் மட்டுமே இந்த பிரம்மாண்டமான ஏர்பஸ் ஏ380 விமானத்தை தரை இறக்க முடியும். பிற விமான நிலையங்களில் இந்த விமானத்தை தரை இறக்கும் அளவுக்கு ஓடுபாதை நீளமும், கட்டமைப்பு வசதிகளும் இல்லை.

இந்த சிறிய சிரமங்களைவிட விமான பொறியியல் துறையின் உன்னத படைப்பாக கருதப்படும் ஏர்பஸ் ஏ380 விமானத்தில் வாழ்வில் ஒருமுறையாவது பயணிப்பது பலரின் வாழ்க்கை லட்சியமாக இருப்பதில் வியப்பேதும் இல்லை.