பைக் மீது காரை மோதி உயிரிழப்பு ஏற்படுத்திய பெண்ணுக்கு சலுகை காட்டிய நீதிபதி!

Written By:

இருசக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் மீது காரால் மோதி உயிரிழப்பை ஏற்படுத்தியவருக்கு பெண் என்ற காரணத்தால் நீதிமன்றம் சிறை தண்டனையை தவிர்த்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

விபத்து வழக்கு ஒன்றில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் வெறும் பேச்சுக்கு தான் என்பதை போல் உள்ளது.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

கடந்த 2015ஆம் ஆண்டு டொயோட்டா இன்னோவா கார் ஒன்று அதிவேகமாக சென்று இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இளம் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தான் அதிசய தீர்ப்பு வெளியாகியுள்ளது.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

மும்பையில் உள்ள மெரைன் டிரைவ் பகுதியை சேர்ந்த இளம் பெண் லஜ்ஜா ஷா. இவர் ஒரு மருத்துவர் ஆவார்.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

அங்குள்ள தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனை ஒன்றில் இவர் பேச்சு வருவதற்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

கடந்த 2015, மே 25ஆம் தேதி சவுபதி பீச் ரோட்டில் தன் டொயோட்டா இன்னோவா காரில் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தார் லஜ்ஜா ஷா.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அக்கா, தம்பி இருவர்

மீது லஜ்ஜா ஷாவின் கார் அதிவேகத்தில் இடித்துத்தள்ளியது.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

விபத்துக்குள்ளான பைக்கை ஆகாஷ் என்ற 22 வயது இளைஞர் ஓட்டி வந்தார். பின் இருக்கையில் ஆகாஷின் அக்கா ஜோதி (வயது 25) அமர்ந்திருந்தார்.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

லஜ்ஜா ஷாவின் கார் மோதியதில் ஆகாஷ், ஜோதி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். உயிருக்கு போராடிய இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

இதில் சிகிச்சை பலணளிக்காமல் ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். காயங்களுடன் ஆகாஷ் மட்டும் உயிர்பிழைத்தார்.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

விபத்தை ஏற்படுத்திய பெண் மருத்துவர் லஜ்ஜா ஷா மீது காவல்நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

அதில் 273 (அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்), 304 ஏ(உயிரிழப்பை ஏற்படுத்துதல்) மற்றும் 337 (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்தல், காயம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகள் ஆகும்.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக மும்பை பெருநகர நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இரண்டு வருடங்களாக வழக்கு நடைபெற்று வந்தாலும் லஜ்ஜா ஷாவை காவல்துறையினர் ஒரு நாள் கூட காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

வழக்கை விசாரித்து வந்த நீதிபதி வி.ஆர். தசரி விபத்தை நேரில் பார்த்த 7 சாட்சிகளிடம் விசாரித்து இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளார்.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

அதில் விபத்தில் இறந்த ஜோதியின் தம்பி ஆகாஷ் மற்றும் விபத்தை ஏற்படுத்திய லஜ்ஜா ஷாவின் கார் ஓட்டுநர் ஆகியோரும் அடங்குவர். விபத்து நடந்த போது ஓட்டுநர் அருகாமையில் அமர்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

இந்த வழக்கில் தற்போது இறுதி தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதி, லஜ்ஜா ஷாவின் பொறுப்பற்ற தன்மையே விபத்துக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

எனினும், குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு பெண் என்பதாலும், அவர் டாக்டராக பணிபுரிந்து வருவதன் காரணத்தினாலும், அவருக்கு சிறைத் தண்டனைக்கு பதிலாக அபராதம் மட்டும் விதிக்கப்படுவதாக நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பெண் மருத்துவர் லஜ்ஜா ஷாவுக்கு நீதிபதி 72,000 ரூபாய் மட்டும் அபராதமாக விதித்து தீர்ப்பளித்தார்.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

பெண் என்ற காரணத்தை குறிப்பிட்டு நீதியில் ஆண் - பெண் பாகுபாடு காட்டியுள்ள நீதிபதியின் தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

மருத்துவர் லஜ்ஜா ஷா மீது பதியப்பட்ட பிரிவுகளிலேயே மிகவும் முக்கியமானது 304ஏ என்ற பிரிவாகும்.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

இதன் மூலம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம், அல்லது இரண்டும் சேர்த்தும் கூட தண்டனை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

மருத்துவர் ஷாவிற்காக வழக்கை வாதாடிய அவரின் வழக்குறைஞர் பட்டீல், விபத்துக்கு காரணம் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஆகாஷ் தான் என்றும், ஷா மீது தவறேதுமில்லை என்றவாறு வாதாடினார்.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

எனினும், விபத்து நடந்த சாலையில் இன்னோவா காரின் தடம் 10 முதல் 15 அடி தூரத்திற்கு மிக அழுத்தமாக பதிவாகியிருந்தது.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

இதன் மூலம் இன்னோவா கார் மிக வேகமாக வந்துள்ளது தெரிவருகிறது. இதுவே விபத்துக்கு காரணம் என்று காரணத்தால் வழக்கறிஞரின் வாதத்தை நீதிபதி ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

இது மோசமான தீர்ப்பு இதனை ஏற்க இயலாது என்பதால் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம் என்று ஷாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

ஏற்கெனெவே சல்மான் கான் மீது இதேபோன்ற வழக்கு நடைபெற்று அதில் அவர் விடுவிக்கப்பட்டார். பிரபலம் என்ற காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்ற கருத்து நிலவுகிறது.

விபத்தை ஏற்படுத்தியவர் பெண் என்பதால் நீதிமன்றம் சலுகை..!

தற்போது பெண் என்பதால் சிறை தண்டனை விதிக்காமல் அபராதம் மட்டும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ள சம்பவம் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. நீதிக்கு முன் ஆன் பெண் பேதம் இருக்கிறதா என்ன..?

English summary
Read in Tamil about women driver who killed a girl in a accident spared jail term in mumbai.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark