மணிக்கு 3,500 கிமீ வேகத்தில் பறக்கும் உலகின் அதிவேக விமானம்

By Saravana

லாக்ஹீட் எஸ்ஆர்71 பிளாக்பேர்டு... இதுதான் உலகின் அதிவேக பறக்கும் விமானம் என்ற பெருமையை தக்க வைத்து வருகிறது. நினைத்து பார்த்திராத வேகத்தில் செல்லும் திறன் படைத்த இந்த விமானம் அமெரிக்க விமானப்படையில் வேவு பார்க்கும் பணிகளில் பயன்படுத்தப்பட்டது.

ஏவுகணைகளை விட்டு தாக்க முடியாத அளவுக்கு வேகம் கொண்ட இந்த உளவு விமானத்தின் பல சுவாரஸ்யமான சிறப்பு தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தயாரிப்பு

தயாரிப்பு

எஸ்ஆர்-71 பிளாக்பேர்டு போர் விமானங்கள் கடந்த 1964 முதல் 1998 வரை அமெரிக்க விமானப் படையில் இணைந்திருந்தன.

12 விமானங்கள் அவுட்

12 விமானங்கள் அவுட்

மொத்தம் 32 விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. எதிரிகளின் ஏவுகணை கூட நெருங்க முடியாத விமானங்கள் தானாகவே விபத்துக்களில் சிக்கியதால் 12 விமானங்களை அமெரிக்கா பறிகொடுத்தது.

 அதிவேக சாதனை

அதிவேக சாதனை

கடந்த 1976ம் ஆண்டு ஜூலை 28ந் தேதி மணிக்கு 3,529.6 கிமீ வேகத்தை தொட்டு அதிவேக விமானம் என்ற பெருமையை பெற்றது. ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 58.83 கிமீ வேகத்தில் சென்றது.

டிசைன்

டிசைன்

1960களில் லாக்ஹீடு ஏ12 வேவு பார்க்கும் விமானத்தை அடிப்படையாக கொண்டு இந்த விமானம் உருவாக்கப்பட்டது. இந்த உளவு விமானத்தின் தயாரிப்பு திட்டத்துக்கு கிளாரன்ஸ் கெல்லி ஜான்சன் என்ற பொறியாளர் தலைமை வகித்தார்.

காக்பிட்

காக்பிட்

காக்பிட்டில் இரண்டு விமானிகள் அமர்ந்து இயக்க முடியும். காக்பிட்டுக்கு பின்புற அறையில் வேவுபார்த்தல் மற்றும் தற்காப்பு சாதனங்களை இயக்குவதற்கான பொறியாளர் அமர்ந்திருக்கும் அறை இருந்தது.

 டைட்டானியம் பாடி

டைட்டானியம் பாடி

வெப்பம் மற்றும் அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் சிறப்பாக இருப்பதற்காக இதன் பாடி கட்டுமானத்தில் 85 சதவீதம் அளவுக்கு டைட்டானியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பாகங்கள் கலப்பு உலோகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

 பிரத்யேக ஆடை

பிரத்யேக ஆடை

இந்த விமானம் 80,000 அடி உயரத்தில் பறக்கும் என்பதால், சாதாரண விமானிகள் அணியும் உடைகளை அணிந்து இயக்க இயலாது. 43,000 அடிகளுக்கு மேல் செல்லும்போது ஆக்சிஜன் கிடைப்பது சிரமம் என்பதால், விமானிகள் பிராண வாயு செலுத்தும் வசதி கொண்ட விசேஷ உடை அணிந்தே விமானத்தை செலுத்தினர்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த விமானத்தில் அதிக சக்திகொண்ட பிராட் அண்ட் விட்னி ஜே58 பி4 எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. அந்த காலக்கட்டத்தில் இந்த எஞ்சின் தொழில்நுட்ப புதுமைகளை கொண்டிருந்ததாக கருதப்பட்டது.

ஸ்பெஷல் டிராக்கர்

ஸ்பெஷல் டிராக்கர்

நட்சத்திரங்களை வைத்து தடம் அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் கொண்ட விசேஷ டிராக்கர் கருவி கூரை பகுதியில் பொருத்தப்பட்டிருந்தது. எனவே, ஒவ்வொரு முறை விமானம் புறப்படுவதற்கு முன்பாக இந்த டிராக்கர் கருவி முழுமையாக செயல்பட வேண்டும். அதன்பிறகுதான் விமானத்தை கிளப்ப முடியும்.

செல்லப் பெயர்

செல்லப் பெயர்

மொத்தம் 93 விமானிகள் மட்டுமே இந்த விமானங்களை இயக்கியுள்ளனர். அவர்கள் பிளாக்பேர்டு விமானத்தை ஸ்லெட் என்று செல்லப் பெயரிட்டு அழைத்தனர்.

Most Read Articles
English summary
Since 1976, the Lockheed SR-71 Blackbird has held the world record for the fastest ‘air-breathing manned aircraft’ with a recorded speed of 1,905.81 knots (2,193.2 mph; 3,529.6 km/h). That works out to a staggering 36.55 miles/58.83 km per minute.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X