டன் டன்னாக கொட்டப்பட்டிருக்கும் பழைய டயர்கள்

குவைத் நாட்டின் சுலைபியா நகருக்கு அருகில் ஆயிரக்கணக்கான டன் எடை கொண்ட பயன்படுத்தப்பட்ட வாகன டயர்கள் மலைபோல் குவிக்கப்பட்டு கிடக்கிறது. இதுவே உலகின் மிகப் பெரிய பழைய டயர் குப்பைக் கிடங்காக கருதப்படுகிறது. இந்த இடத்தில் மட்டும் 70 லட்சம் பயன்படுத்தப்பட்ட டயர்கள் கொட்டப்பட்டு கிடப்பதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பழைய டயர்களை இதுபோன்று போட்டு வைத்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், முறைப்படி அவற்றை மறுசுழற்சி அல்லது மறு பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், குவைத்தில் அதுபோன்ற சட்டத்திட்டங்கள் இல்லை. இதனால், அந்த பகுதியில் கொண்டு வந்து கொட்டப்படும் டயர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

அந்த பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை டயர்கள் மலைபோல் குவிந்து கிடைக்கின்றன. ஆகாயத்தில் இருந்து பார்க்கும்போது கூட அந்த இடம் மட்டும் தனியாக தெரிகிறது. இந்த டயர்களை கொளுத்திவிட்டாலும் அதிலிருந்து நச்சுப் புகை வெளியேறி காற்று மண்டலத்தை பாதிக்கும் அபாயம் இருக்கிறது. இந்த பிரச்னைக்கு அரசாங்கம் உரிய தீர்வு காண வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டயர் குப்பை கிடங்கு - படங்கள்
டயர் குப்பை கிடங்கு - படங்கள்
டயர் குப்பை கிடங்கு - படங்கள்
டயர் குப்பை கிடங்கு - படங்கள்
ஏரியல் வியூ

ஏரியல் வியூ

டயர் குப்பை கிடங்கு - படங்கள்
டயர் குப்பை கிடங்கு - படங்கள்
Most Read Articles
English summary
In Kuwait City's Sulaibiya area every year gigantic holes are dug out out in the sandy earth and filled with old tyres - there are now over seven million in the ground.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X