பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!

பயணிகளையும், சரக்குகளையும் குறிப்பிட்ட இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கு தேவைக்கேற்ற வடிவங்களில் வாகனங்களின் வடிவமைப்பும், பயன்பாடும் அமைகிறது. இதுபோன்று, உலகிலேயே மிகப்பெரிய மோட்டார் வாகனங்களின் தொகுப்பை இங்கே வழங்குகிறோம்.

நீர், நிலம், ஆகாயம் என அனைத்து மார்க்கங்களிலும் மிகப்பெரிய வாகனங்களை இங்கே தொகுத்துள்ளோம். அந்த வாகனங்களின் படங்களையும், சுவையான தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

இங்க எல்லாமே பெரிசுதான்...

இங்க எல்லாமே பெரிசுதான்...

100 பேரை தூக்கிக் கொண்டு பறக்கும் விமானத்தை கண்டும், ஆயிரக்கணக்கான பயணிகளை சுமந்து மிதக்கும் கப்பலை கண்டும் வியந்திருப்பீர்கள். அதுபோன்று, அனைத்து வழிகளிலும் மிக பிரம்மாண்டமான வாகனங்கள் மற்றும் எந்திரங்களை இங்கே தொகுத்துள்ளோம். படித்து மகிழுங்கள்.

உலகின் பெரிய டிரக்

உலகின் பெரிய டிரக்

சுரங்கங்களில் பயன்படுத்தும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய டிரக்கை பெலாரஸ் நாட்டை சேர்ந்த டிரக் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. BelAZ 75710 என்று பெயரிடப்பட்ட இந்த பிரம்மாண்ட டிரக்கில் ஒரு பெரிய வீட்டையே வைத்து கொண்டு செல்ல முடியும். கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த டிரக் தற்போது சைபீரிய பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்தில் வைத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2015ம் ஆண்டு முதல் வணிக ரீதியில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

உலகின் பெரிய அகழ்வு எந்திரம்

உலகின் பெரிய அகழ்வு எந்திரம்

சுரங்கங்களில் அகழ்வு பணிகளில் பயன்படுத்துவதற்காக ஜெர்மனியை சேர்ந்த கிரப் நிறுவனம் உருவாக்கிய உலகின் மிகப்பெரிய அகழ்வு எந்திரம்தான் Bagger 288. ரெயின்பிரான் என்ற நிலக்கரி சுரங்க நிறுவனத்துக்காக தயாரித்துக் கொடுக்கப்பட்ட இந்த நகரும் அமைப்புடைய அகழ்வு எந்திரம் ஒரு கால்பந்து மைதானத்தின் வடிவத்திலானது. இது 98 அடி ஆழம் வரை அகழ்ந்தெடுக்கும் திறன் கொண்டது. இது ஒரு நிமிடத்துக்கு 10 மீட்டர் வரை நகரும். இது திரும்புவதற்கு குறைந்தது 100 மீட்டர் சுற்றளவு வேண்டும். இந்த அகழ்வு எந்திரம் 2012ல் வெளிவந்த கோஸ்ட் ரைடர் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

 உலகின் பெரிய கிராவ்லர்

உலகின் பெரிய கிராவ்லர்

செயற்கைகோள்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக நாசா உருவாக்கிய இந்த மிகப்பெரிய கிராவ்லர்கள் உலகின் மிகப்பெரிய வாகனங்களில் ஒன்றாக இருக்கிறது. 131 அடி நீளமும், 114 அடி அகலம் கொண்டது. இதன் தரை இடைவெளியையும் கூட்டிக் குறைக்க முடியும். இந்த கிராவ்லரை 30 எஞ்சினியர்கள் மற்றும் டிரைவர்கள் கொண்ட குழு இயக்கும்.

Picture credit: Wiki Commons

 உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் ராயல் கரீபியன் நிறுவனத்திற்கு சொந்தமான ஓசிஸ் ஆஃப் த சீஸ் என்ற சொகுசு சுற்றுலா கப்பல். உலகிலேயே முதல்முறையாக 6,000க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் இதுதான். 2009ம் ஆண்டு சேவைக்கு வந்தது. மணிக்கு 41.9 கிமீ வேகத்தில் செல்லும். இது 1.4 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. கரீபியன் கடல் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

உலகின் பெரிய சூப்பர் டேங்கர் கப்பல்

உலகின் பெரிய சூப்பர் டேங்கர் கப்பல்

உலகின் மிகப்பெரிய சூப்பர் டேங்கர் கப்பலாக சீவைஸ் ஜெயன்ட் குறிப்பிடப்படுகிறது. இது தற்போது மான்ட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது 1979ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கப்பல் 81 அடி நீளம் கொண்டது. 2009ம் ஆண்டு டிசம்பரில் இந்த கப்பல் கடைசி பயணத்தை மேற்கொண்டது. கடந்த 2009ம் ஆண்டு குஜராத் மாநிலத்தை சேர்ந்த கப்பல் உடைப்பு நிறுவனம் ஒன்று இந்த கப்பலை வாங்கியது.

உலகின் பெரிய விமானம்

உலகின் பெரிய விமானம்

உலகின் மிகப்பெரிய ஆகாய விமானமாக அன்டோனோவ் ஏஎன் 225 மிரியா குறிப்பிடப்படுகிறது. கடந்த 1980களில் சோவியத் யூனியனின் அன்டோனோவ் டிசைன் பீரோ இந்த விமானத்தை தயாரித்தது. 1988ல் சேவைக்கு வந்தது. மிரியா என்றால் உக்ரைன் மொழியில் கனவு என்று அர்த்தமாம். உக்ரைனை சேர்ந்த நிறுவனம் ஒரே ஒரு விமானத்தை இயக்கியது. இரண்டாவது விமானம் போதிய நிதி இல்லாதல் பாதியிலேயே கைவிடப்பட்டது. விண்வெளி ஓடங்களை கொண்டு செல்வதற்காக இது உருவாக்கப்பட்டது. இன்றைக்கும் கனரக பொருட்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்தில் பயன்படுத்தப்படுகிறது. பின்புறத்திலான மெயின் லேண்டிங் கியர் 32 சக்கரங்களை கொண்டது. இதில் சில சக்கரங்கள் திருப்பும் வசதி கொண்டது. எனவே, இதனை 200 அடி அகலம் கொண்ட ஓடுதளத்தில் கூட எளிதாக திருப்ப முடியும். மணிக்கு 800 கிமீ வேகத்தில் பறக்கும்.. உலகின் நீளமான இறக்கை கொண்ட விமானம். 290 அடி நீளம் கொண்ட இறக்கை நீளம் கொண்ட இந்த விமானத்தில் 640 டன் கனரக பொருட்களை கொண்டு செல்ல முடியும்.

உலகின் பெரிய பயணிகள் விமானம்

உலகின் பெரிய பயணிகள் விமானம்

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமாக ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ380 இருந்து வருகிறது. டபுள்டெக்கர் விமானமான இதில், மூன்றாம் வகுப்பு இருக்கைகள் கொண்ட கட்டமைப்பில் 555 பயணிகள் பயணிக்கலாம். இந்த விமானம் 15,700 கிமீ தூரம் இடைநில்லாமல் பறக்கும் வல்லமை கொண்டது. இது 650 டன் எடையை தூக்கிக் கொண்டு பறக்கும்.

உலகின் பெரிய நீர்மூழ்கி கப்பல்

உலகின் பெரிய நீர்மூழ்கி கப்பல்

தி புரொஜெக்ட் 941 அல்லது அகுலா என்ற நீர்மூழ்கி கப்பல்தான் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பலாக குறிப்பிடப்படுகிறது. இது ரஷ்ய மொழியில் சுறா என்று பொருள்படுகிறது. இது அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலாகும். ஒரு மாதம் கூட நீரில் மூழ்கி இருப்பதற்கான வசதிகளை கொண்டது. 1980ல் செயல்பாட்டு வந்த இந்த நீர்மூழ்கி கப்பலை புனரமைக்க திட்டமிட்டபோதிலும், இதனை புனரமைக்கும் செலவில் ஒரு புதிய நீர்மூழ்கி கப்பலை உருவாக்கிவிடலாம் என கருதி, அந்த திட்டம் கைவிடப்பட்டது.

 உலகின் பெரிய விமானம்தாங்கி போர்கப்பல்

உலகின் பெரிய விமானம்தாங்கி போர்கப்பல்

அமெரிக்க கடற்படையில் 10 நிமிட்ஸ் கிளாஸ் விமானதாங்கி போர்கப்பல்கள் உள்ளன. இந்த 10 விமானம் தாங்கி கப்பல்களுக்கு தலைமை வகிக்கும் கப்பலுக்கு நிமிட்ஸ் என்ற ராணுவ உயரதிகாரியின் பெயரில் இயங்குகிறது. அணுசக்தி மூலம் இயங்கும் இந்த சூப்பர் கேரியர் விமானம் தாங்கி கப்பல்கள் 1,092 அடி நீளம் கொண்டது. மணிக்கு 56 கிமீ வேகத்தில் செல்லும் வல்லமை கொண்டவை. 20 ஆண்டுகளுக்கு எரிபொருள் நிரப்பும் தேவையில்லை. 50 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாக இந்த கப்பல்கள் குறிப்பிடப்படுகின்றன.

உலகின் பெரிய ஹெலிகாப்டர்

உலகின் பெரிய ஹெலிகாப்டர்

ஹோமர் என்றழைக்கப்படும் இந்த ஹெலிகாப்டர் உலகின் பிரம்மாண்டமான ஹெலிகாப்டர் மாடலாக குறிப்பிடப்படுகிறது. 1969ம் ஆண்டு முதல் புரோட்டோடைப் மாடல் 31,030 கிலோ எடையை தூக்கி வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்தது. மேலும், இதன் வி12 மாடல் அதி உயரத்தில் பறந்து சாதனை படைத்தது. இந்த ஹெலிகாப்டரின் சாதனைகளை இதுவரை முறியடிக்கப்படவில்லை. இந்த ஹெலிகாப்டரை டிசைன் செய்த எஞ்சினியர்களுக்கும் ஏராளமான விருதுகள் கிடைத்தன. இதன் தயாரிப்பு 1974ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. மாஸ்கோ அருகிலுள்ள லூபர்ட்ஸ்கை மாவட்டத்திலுள்ள ஆலையில் இந்த ஹெலிகாப்டரின் புரோட்டோடைப் மாடல் இன்றைக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

Picture credit: Wiki Commons

உலகின் பெரிய ராக்கெட்

உலகின் பெரிய ராக்கெட்

சாட்டர்ன்5 என்ற அமெரிக்காவின் ராக்கெட்தான் உலகின் இதுவரை தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளில் சாட்டர்ன் 5தான் பெரியதாக குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து 13 முறை சாட்டர்ன்- 5 ராக்கெட்டுகள் உயிர்ச்சேதம், பொருட்சேதம் இல்லாமல் ஏவப்பட்டுள்ளன. இந்த சாட்டர்ன் ராக்கெட்டில் 1968 - 1972ம் ஆண்டுகளுக்கு இடையில் 24 விண்வெளி வீரர்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக எடையை சுமந்து கொண்டு விண்வெளிக்கு பறந்து செல்வதும் இதன் பெருமை. 363 அடி நீளமும், 33 அடி அகலமும் கொண்டது.

Picture credit: Wiki Commons

உங்களது கருத்தை தெரிவிக்கலாம்

உங்களது கருத்தை தெரிவிக்கலாம்

இந்த செய்தியில் விடுபட்ட அல்லது சுவராஸ்யமான பெரிய வாகனங்கள் பற்றிய தகவல் இருந்தால் கருத்துப் பெட்டியில் தெரிவிக்கலாம்.

Most Read Articles
English summary
Ever wondered to what lengths humans will go to munch up the Earth and transport bits of it from one place to the next? These are our greatest instruments. Jalopnik readers found the most massive land vehicles ever built, largely made for mining and the occasional war.P
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X