உலகின் மிகப்பெரிய லம்போர்கினி ஷோரூம் இந்த நாட்டில் தான் உள்ளது

Written By:

உலகின் மிகப்பெரிய லம்போர்கினி ஷோரூம் துபாயில் தான் அமைக்கபட்டுள்ளது. இது சமீபத்தில் தான் பொதுமக்கள் அனுமதிக்கபடும் வகையில் திறக்கபட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய லம்போர்கினி ஷோரூம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

லம்போர்கினி...

லம்போர்கினி...

இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான லம்போர்கினி, ஸ்போர்ட்ஸ் காரை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், லக்சுரி சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரை சர்வதேச அளவில் வழங்கி வருகிறது.

லம்போர்கினி என்ற பெயரை கேட்டாலே, நம்பமுடியாத வேகம் மற்றும் சிறந்த ஸ்போர்ட்ஸ் கார் என்ற அம்சங்கள் தான் நினைவிற்கு வரும்.

உலகின் மிகப்பெரிய ஷோரூம்...

உலகின் மிகப்பெரிய ஷோரூம்...

உலகின் மிகப்பெரிய லம்போர்கினி ஷோரூம், லம்போர்கினி துபாய் என்ற பெயரில் துபாயில் அமைக்கபட்டுள்ளது. சுமார் 30,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கபட்டுள்ள இது, தற்போது பொதுமக்களுக்கும் அனுமதிக்கபட்டுள்ளது.

இது ஷோரூம் என்ற அடிப்படையில் மட்டும் மிகப்பெரியதாக இல்லை. சர்வீஸ் செண்டர் என்ற அடிப்படையிலும் மிகப்பெரியதாகும்.

லம்போர்கினி துபாய்...

லம்போர்கினி துபாய்...

லம்போர்கினி துபாய் 3 நிலைகளாக பிரிக்கபட்டுள்ளது. இங்கு இந்த ஸ்போர்ட்ஸ் கார்களை காட்சிபடுத்த 2 பெரிய பிரைவேட் டிஸ்பிளே பகுதிகள் உள்ளது.

மேலும், இந்த லம்போர்கினி துபாய் ஷோரூம், ஸ்டீல் கேபிள்கள் மூலம் தொங்கவிடபட்டுள்ள கட்டடத்தின் முகப்பு (கிளாஸ் ஃபகேட்) பகுதியையும் கொண்டுள்ளது.

தேவைக்கு ஏற்ற ஷோரூம்;

தேவைக்கு ஏற்ற ஷோரூம்;

உலக அளவில், துபாயில் தான் மிகச்சிறந்த மற்றும் மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் கார் ஷோரூம்களும் உள்ளது.

இதற்கு முக்கிய காரணம், இங்கு இத்தகைய ஸ்போர்ட்ஸ் கார்களும் டிமாண்ட்டும், அந்த அளவுக்கு அதிகமாக உள்ளது.

டிமாண்ட் கொண்ட மாடல்கள்;

டிமாண்ட் கொண்ட மாடல்கள்;

லம்போர்கினி வி10 மற்றும் வி12 சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் மாடல்கள் தான் துபாயில் மிகவும் அதிக டிமாண்ட் கொண்ட மாடல்கள் ஆகும்.

இந்த டிமாண்டை பூர்த்தி செய்ய, லம்போர்கினி நிறுவனம் துபாயில் உலகின் மிகப்பெரிய ஷோரூமை ஸ்தாபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

உயர் அதிகாரி கருத்து;

உயர் அதிகாரி கருத்து;

அல் ஜஸீரி மோட்டார்ஸ் நிறுவனத்தின் (லம்போர்கினி துபாய்) ஷோரூமின் ஜெனரல் மேனேஜர் ஆன பத்ர் அல் ஜஸீரி, இந்த லம்போர்கினி துபாய் ஷோரூமின் திறப்பு குறித்து மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார்.

"இந்த லம்போர்கினி துபாய் ஷோரூமின் திறப்பு, துபாயில் லம்போர்கினியின் அடுத்த பெரிய நடவடிக்கையையும், லம்போர்கினி வி10 மற்றும் வி12 சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரின் அதிகரிக்கும் டிமாண்ட் மற்றும் 2018-ல் வெளியாக உள்ள லம்போர்கினி உருஸ் எஸ்யூவியின் வரவையும் குறிக்கிறது. மேலும், துபாய் லம்போர்கினியின் மிக முக்கிய சந்தையாக வளர்ந்து வருகிறது" என பத்ர் அல் ஜஸீரி தெரிவித்தார்.

பிற தயாரிப்புகள்;

பிற தயாரிப்புகள்;

லம்போர்கினி நிறுவனம் தற்போதைய நிலையில், ஹூராகேன், அவென்டேடார், செண்டெனாரியோ, அவென்டேடார் பிரெல்லி எடிஷன், வெனெனோ ரோட்ஸ்டர் மற்றும் ஆஸ்டீரியான் கான்செப்ட் ஆகிய மாடல்களை வழங்கி வருகிறது.

லம்போர்கினி உருஸ்;

லம்போர்கினி உருஸ்;

லம்போர்கினி நிறுவனம் வழங்கும் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி முதன் முதலாக பீஜிங் மோட்டார் ஷோ 2012-ல் காட்சிபடுத்தபட்டது.

லம்போர்கினி உருஸ் எஸ்யூவி, ஆடியின் 5.2 லிட்டர், வி10, டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகிறது. மேலும், இது பிளக்-இன் தேர்வு கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் கொண்டிருக்கும்.

இந்த இஞ்ஜின் 584 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன கொண்டிருக்கும்.

லம்போர்கினி உருஸ் எஸ்யூவி, உச்சபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 328 கிலோமீட்டர் என்ற வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

500 கிலோ தங்கக் கட்டியில் செதுக்கப்பட்ட உலகின் காஸ்ட்லி லம்போர்கினி கார்!

2018ல் விற்பனைக்கு வருகிறது லம்போர்கினி உரஸ் எஸ்யூவி!

லம்போர்கினி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Italian Automobile Manufacturer Lamborghini has opened the Largest Lamborghini Showroom in the World. This Showroom named as Lamborghini Dubai (Al Jaziri Motors) spread over 30,000 square feet is open to public also. This 30,000 square feet Lamborghini dealership is largest not just as showroom, but largest in term of service center as well. To know more, check here...
Story first published: Wednesday, May 4, 2016, 11:52 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark