இந்தியாவில் 100 கோடி முதலீடு செய்யும் யமஹா..!!

இந்தியாவில் யமஹா நிறுவன மேம்பாட்டு திட்டங்களுக்காக 100 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக அந்நிறுவன இந்திய யமஹா விற்பனை மேலாண்மை இயக்குனர் யொசிமிட்சு ஹிரோக்கோஜு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார். யமஹாவின் இந்த மாபெரும் அறிவிப்பை குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் 100 கோடி முதலீடு செய்யும் யமஹா..!!

சென்னையில் தமிழக அரசின் சார்பில் 73 கோடி ருபாய் செலவில்இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று துவங்கியது. சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் மாநாட்டை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தியாவில் 100 கோடி முதலீடு செய்யும் யமஹா..!!

மாநாட்டில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென்கொரியா, பிரிட்டன் உட்பட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும் ஆட்டோமொபைல், ஹார்ட்வர், தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளை சார்ந்த 11க்கும் மேற்பட்ட முதலீடு திட்டங்கள் செயல்படவுள்ளது. இந்த மாநாட்டில் புகழ்பெற்ற கார் நிறுவனமான ஃபோர்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வணிக மையம் கட்டிடத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

இந்தியாவில் 100 கோடி முதலீடு செய்யும் யமஹா..!!

இந்த மாநாட்டில் இருசக்கர வாகனத்திற்கு மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் பேர்போன நிறுவனமான யமஹா நிறுவனம் கலந்து கொண்டது. யமஹா சார்பில் இந்திய யமஹா விற்பனை மேலாண்மை இயக்குனர் யொசிமிட்சு ஹிரோக்கோஜு பங்கேற்றார. மாநாட்டில் அவர் இந்தியாவில் யமஹா நிறுவனம் கொண்டுவரவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் பேசினார்.

இந்தியாவில் 100 கோடி முதலீடு செய்யும் யமஹா..!!

யமஹா நிறுவனம் இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான யமஹா நிறுவன உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், புதிய மாதிரி வளர்ச்சி மற்றும் மார்க்கெட்டிங் போன்ற மேம்பாட்டு திட்டங்களுக்காக 100 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக யொசிமிட்சு கூறினார். மேலும் யமஹா நிறுவனம் சுராஜ்புர் மற்றும் சென்னையில் அமைந்துள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தினை மேம்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.

இந்தியாவில் 100 கோடி முதலீடு செய்யும் யமஹா..!!

யமஹா நிறுவன முதலீட்டின் முக்கிய அம்சமாக யமஹா பைக்குகளின் பிஎஸ்4 எஞ்சின்களை பிஎஸ்4 எஞ்சினாக மேம்படுத்த யமஹா நிறுவனம் முடிவுசெய்துள்ளதாகவும், விற்பனை மேலாண்மை இயக்குனர் யொசிமிட்சு கூறினார். மேலும் யமஹா ப்ரீமியம் ரக பைக் தயாரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் தரவுள்ளது, இனி ஸ்போர்ட்ஸ் மற்றும் அதுநவீன பைக்குகளை யமஹா நிறுவனம் தயாரிக்கும் என கூறினார்.

இந்தியாவில் 100 கோடி முதலீடு செய்யும் யமஹா..!!

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் யமஹா நிறுவனத்திடம் பல்வேறு விளம்பர திட்டங்கள் உள்ளது, கடந்த 2018ம் ஆண்டினை விட 200 சதவீதம் வாடிக்கையாளர்களை அதிகரிக்க யமஹா நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளாக யொசிமிட்சு கூறினார். இதற்காக பல விளம்பர யுக்திகள் மற்றும் பிரச்சார திட்டங்களை யமஹா நிறுவனம் வகுத்துள்ளதாக அவர் கூறினார்.

இந்தியாவில் 100 கோடி முதலீடு செய்யும் யமஹா..!!

ஏப்ரல் மாதம் வரவுள்ள இந்திய வாகன பாதுகாப்பு திட்டத்தை கருத்தில் கொண்டு தற்போது யமஹா நிருவனம் தனது பைக்குகளுக்கு ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தினை மாற்றி வருகிறது. மேலும் பல மேன்பாட்டுடன் எஃப்இசட், ஆர்15 மற்றும் RZF போன்ற பிரீமியம் ரக பைக்குகளை யமஹா நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்தியாவில் 100 கோடி முதலீடு செய்யும் யமஹா..!!

பிரீமியம் ரக பைக்குகளின் விற்பனையில் கடந்த 2017ம் ஆண்டை விட 23.07 சதவீத வளர்ச்சியை யமஹா நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு எஃப்இசட் மாடல் பைக்குகள் 3,36,000 யூனிட்டுகளும், ஆர்15 மாடல்கள் 2,73,000 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Yamaha India to invest Rs 100 crore: Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X