உலகின் முதல் மின்சார கார்கோ கப்பல்! 1000 கார்களுக்கு இணையான திறன் கொண்டது! அப்படினா இதோட பேட்டரி கெப்பாசிட்டி?

உலகின் முதல் மின்சார கார்கோ கப்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பல் குறித்த பிரம்மிக்க வைக்கும் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

உலகின் முதல் மின்சார கார்கோ கப்பல்... ஆயிரம் கார்களுக்கு இணையான திறன் கொண்டது! இதோட பேட்டரி கெப்பாசிட்டி எவ்ளோ தெரியுமா?

உலகமே மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றது. அனைத்து நாடுகளும் தங்களின் குடிமக்களை மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அவை சுற்றுச் சூழலுக்கு நண்பனாக செயல்படும் என மிக உறுதியாக நம்பப்படுகின்றது. இதனடிப்படையிலேயே உலக நாடுகள் அனைத்தும் மின் வாகன இயக்கத்தை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றன.

உலகின் முதல் மின்சார கார்கோ கப்பல்... ஆயிரம் கார்களுக்கு இணையான திறன் கொண்டது! இதோட பேட்டரி கெப்பாசிட்டி எவ்ளோ தெரியுமா?

இந்த நிலையில், பிரபல ரசாயன உற்பத்தி நிறுவனமான Yara International மின்சார கப்பல் ஒன்றை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஓர் கார்கோ பயன்பாட்டு கப்பல் ஆகும். இதுவே உலகின் முதல் மின்சார கார்கோ பயன்பாட்டு கப்பல் ஆகும். ஆகையால், இதுகுறித்த தகவல் உலகளவில் மின் வாகன ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

உலகின் முதல் மின்சார கார்கோ கப்பல்... ஆயிரம் கார்களுக்கு இணையான திறன் கொண்டது! இதோட பேட்டரி கெப்பாசிட்டி எவ்ளோ தெரியுமா?

எலெக்ட்ரிக் கார், பைக் மற்றும் ஸ்கூட்டர் என சாலையில் இயங்கக் கூடிய வாகனங்கள் மட்டுமே இது நாள் வரையில் இந்த உலகத்தில் அறிமுகமாகி வந்தநிலையில் முதல் முறையாக இவ்வுலகத்தை அலங்கரிக்கும் வகையில் எலெக்ட்ரிக் கப்பல் அறிமுகம் அரங்கேறியிருக்கின்றது.

உலகின் முதல் மின்சார கார்கோ கப்பல்... ஆயிரம் கார்களுக்கு இணையான திறன் கொண்டது! இதோட பேட்டரி கெப்பாசிட்டி எவ்ளோ தெரியுமா?

Yara Birkeland எனும் பெயரிலேயே பேட்டரியால் இயங்கும் கப்பல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாசுபாடு வெளிப்பாட்டைக் குறைக்கும் நோக்கில் இக்கப்பல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் கான்செப்ட் மாடல் 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இதற்கு முழுமையான உருவாக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

உலகின் முதல் மின்சார கார்கோ கப்பல்... ஆயிரம் கார்களுக்கு இணையான திறன் கொண்டது! இதோட பேட்டரி கெப்பாசிட்டி எவ்ளோ தெரியுமா?

மிக விரைவில் இது பயன்பாட்டிற்கும் வர இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் கப்பல் Norwegian இன் இரு நகரங்களுக்கு இடையே பயணிக்கும் வகையில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. நடப்பாண்டின் இறுதிக்குள் இது பயன்பாட்டிற்கு வந்துவிடும் என கூறப்படுகின்றது. இந்த கப்பலில் மிக ரேஞ்ஜ் திறனை வழங்கும் வகையில் 7MWh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்துடன், 13 க்நாட் எனும் அதிகபட்ச வேகத்தை வழங்கக் கூடிய மின் மோட்டார்களும் கப்பலில் பன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்த கப்பல் 103 கன்டெய்னர்கள் வரை ஏற்றி செல்லும் திறன் கொண்டது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் ஓர் அதி-திறன் கொண்ட எலெக்ட்ரிக் காரைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு மிக அதிக திறன் வெளிப்பாட்டைக் கொண்டதாக இக்கப்பல் காட்சியளிக்கின்றது.

உலகின் முதல் மின்சார கார்கோ கப்பல்... ஆயிரம் கார்களுக்கு இணையான திறன் கொண்டது! இதோட பேட்டரி கெப்பாசிட்டி எவ்ளோ தெரியுமா?

இதுமட்டுமின்றி இந்த கப்பலை பயன்படுத்துவதன் வாயிலாக 40 ஆயிரம் ட்ரக்குகளின் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என கூறப்படுகின்றது. 40 ஆயிரம் ட்ரக்குகள் பயன்பாட்டை குறைப்பதன் வாயிலாக அவற்றினால் ஏற்படும் மாசுபாட்டையும் குறைக்க முடியும். இத்துடன், எரிபொருளால் இயங்கும் கப்பலை இயக்குவதைக் காட்டிலும் எலெக்ட்ரிக் கப்பலின் வாயிலாக பல மடங்கு லாபத்தைப் பெற முடியும் என தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றது.

மேலும், அதிக லாபத்தின் காரணமாக கணிசமாக ஷிப்பிங் கட்டணத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு குறைக்கவும் முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இக்கப்பலின் வருகை தரை வழியை மட்டுமின்றி நீர் வழித் தடத்தையும் மின்சார திறன் கொண்ட போக்குவரத்து வாகனங்களே ஆளுகை செய்யும் என்பதை உறுதிச் செய்திருக்கின்றன.

Most Read Articles

English summary
Yara international created world s first electric cargo ship yara birkeland
Story first published: Wednesday, September 1, 2021, 19:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X