மொத்த குடும்பத்தையும் உள்ளே ஏத்திட்டு போனாலும் இடம் மிச்சம் இருக்கும்! இந்த 5 கார் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலை!
எஸ்யூவி (SUV), ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களை காட்டிலும் எம்பிவி (MPV) ரக கார்கள் அளவில் பெரியதாக இருப்பதினாலேயே உட்புறத்தில் அதிக இடவசதி உடன் கிடைக்கின்றன. இந்த ஒரு காரணத்திற்காக பலரும் எம்பிவி ரக கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். அவ்வாறான எம்பிவி கார்கள், எலெக்ட்ரிக் மோட்டார் (Electric Motor) மற்றும் பேட்டரி (Battery) உடன் எலெக்ட்ரிக் எம்பிவி காராகவும் கிடைக்கின்றன. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அவ்வாறான எலெக்ட்ரிக் எம்பிவி கார்களை அவற்றின் விலை வாரியாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV): இதனை ஒரு முழு எம்பிவி கார் என சொல்ல முடியாது. ஏனெனில், எம்பிவி, எஸ்யூவி என இரண்டும் கலந்த சியூவி (CUV) ரக காராக விண்ட்சர் இவி உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, எம்பிவி கார்களை போன்று உயரமான உடலமைப்புடன், எஸ்யூவி கார்களுக்கே உண்டான ஸ்டைலில் இந்த எலெக்ட்ரிக் காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் உருவாக்குகிறது.

இருப்பினும், ஒரே பெட்டகமான உடலமைப்பினால் எம்பிவி என அழைக்கப்படும் விண்ட்சர் இவி ஆனது 5 இருக்கைகளை மட்டுமே கொண்ட காராகும். இருப்பினும், தற்போதைய நிலவரப்படி இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காரான இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.11.98 லட்சத்தில் இருந்து ரூ.15.95 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளது. இந்த காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 331கிமீ- 449கிமீ வரையிலான ரேஞ்சை வேரியண்ட்டை பொறுத்து பெறலாம்.
கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி (Kia Carens Clavis EV): கியா நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கொரியன் ஸ்டைல் எலெக்ட்ரிக் கார் இதுவாகும். பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் கேரன்ஸ் கிளாவிஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்சனாக இது விளங்குகிறது.

வெறும் ரூ.17.99 லட்சம்- ரூ.24.49 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் 7 இருக்கைகள் உடன் விற்பனை செய்யப்படுவதுதான் இந்த கியா எலெக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்பம்சம் ஆகும். ஏனெனில், இந்தியாவிலேயே குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய 7-சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி கார் இதுவாகும். மேலும், 404கிமீ- 490கிமீ வரையிலான அதிகப்படியான ரேஞ்சும் வழங்குவது இந்த காரின் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.
பிஒய்டி இமேக்ஸ் 7 (BYD eMAX 7): சீன ஸ்டைல் எலெக்ட்ரிக் காராக இருப்பினும் இது இந்தியாவில், தமிழ்நாட்டில்தான் அசெம்பிள் (Assemble) செய்யப்படுகிறது. 6 மற்றும் 7 இருக்கை ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் இந்த எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.26.90 லட்சத்தில் இருந்து ரூ.29.90 லட்சம் வரையில் உள்ளது.
இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 420கிமீ-இல் இருந்து 530கிமீ வரையிலான ரேஞ்சை பெறலாம். முன்பு விற்பனையில் இருந்த பிஒய்டி இ6 எலெக்ட்ரிக் காரின் அடுத்த தலைமுறை அப்கிரேட் வெர்சனாக கொண்டுவரப்பட்ட இமேக்ஸ் 7 காரில் பிளேடு பேட்டரி டெக்னாலஜி பயன்படுத்தப்படுவதால், அதிக ரேஞ்சை பெற முடிகிறது.
எம்ஜி எம்9 இவி (MG M9 EV): ரூ.69.90 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இதுவரையில் நாம் இந்த தொகுப்பில் பார்த்த எலெக்ட்ரிக் எம்பிவி கார்களிலேயே இது விலைமிக்கதாக விளங்குகிறது. இருப்பினும், குறைந்த விலையில் லக்சரியான எலெக்ட்ரிக் எம்பிவி காரை வாங்க விரும்புபவர்களுக்கு இதுவே ஏற்றது ஆகும்.
7-சீட்டர் காரான எம்9 இவி-இன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 548கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். லக்சரி கார் என்பதை நியாயப்படுத்தும் விதமாக மிகவும் சௌகரியமான பயணத்தை வழங்கக்கூடிய 16 வழிகளில் அட்ஜெஸ் செய்யக்கூடிய 'பவர்டு' ஒட்டோமேன் இருக்கைகள் இந்த எம்ஜி எலெக்ட்ரிக் காரின் இரண்டாவது வரிசையில் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு வரவேற்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்ற எலெக்ட்ரிக் காரை வாங்க நினைப்பவர்களுக்கு இந்த கார்கள் ஏற்றவையாக இருக்கும். இருப்பினும், இவற்றில் ஒன்றை தேர்வு செய்வது சற்று சிரமமே. ஏனெனில், இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஏனெனில், இவற்றின் பயன்பாடும் சரி, அவற்றில் வழங்கப்படும் தொழிற்நுட்ப அம்சங்களும் சரி அவற்றின் விலைக்கு ஏற்ப வெவ்வேறானதாக விளங்குகின்றன. ஆதலால், தங்களது பட்ஜெட்டிற்கு ஏற்ற கார் எது என்பதை பார்த்து தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Click it and Unblock the Notifications








