கார் கலரை வைத்து குணாதிசயத்தை கூறும் புதிய 'ஹைடெக்' ஜோதிடம்

கார் நிறத்தை வைத்து ஒருவர் எப்படிப்பட்ட குணாதிசயத்தை உடையவர் என்பதை கூறிவிட முடியும் என்று சமீபத்திய ஆய்வு முடிவு கூறுகிறது. வண்ணங்களால் நிறைந்த வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வண்ணங்களின் மீது ஈர்ப்பு இருக்கிறது. அவர்கள் போடும் சட்டை முதல் பொட்டு வரை இது பிரதிபலிக்கும்.

கார் வாங்கும்போதும் கலர் என்ற இந்த விஷயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அவரவர்க்கு பிடித்த கலரிலேயே காரை தேர்வு செய்கின்றனர். இதில், இந்த கலர் எனக்கு ராசி, இந்த கலர் எனக்கு பொருத்தம், இந்த கலர் அந்தஸ்தானது என்பது போன்ற காரணங்கல் அடக்கம். அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், உங்களது கார் கலரும், உங்களுடைய குணாதிசயமும் ஒன்றாக இருக்கிறதா என்பதை ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை வைத்து சோதிக்கலாம் வாருங்கள்.

சிவப்பு நிறம்

சிவப்பு நிறம்

நவநாகரீகத்தை விரும்புவர்கள், அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்கள். கொள்கை பிடிப்பு கொண்டிருப்பதோடு, எந்த விஷயத்தையும் மூடி மறைக்காமல் பட்டென்று போட்டு உடைக்கவும் தயங்கமாட்டார்கள்.

கறுப்பு நிறம்

கறுப்பு நிறம்

அதிகாரம் படைத்த பதவிகளில் இருப்பர். கட்டுப்பாடு, முன்எச்சரிக்கையுடன் செயல்படுவது, அதீத தன்னம்பிக்கை கொண்டவர்களாக பீடு நடைபோடுவர். ஓவிய கலை மீது மிகுதியான ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர்.

 சில்வர் நிறம்

சில்வர் நிறம்

சில்வர் நிறத்தில் கார் வைத்திருப்பவர்கள் செல்வ செழிப்புடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள். ஐபேடு உள்ளிட்ட நவீன சாதனங்கள் மீது கொள்ளை பிரியம் கொண்டவர்களாக இருப்பர்.

தங்க நிறம்

தங்க நிறம்

இந்த கலரில் கார் வைத்திருப்பவர்கள் செல்வ வளம் மிக்கவர்களாகவும், சுதந்திரத்தை அதிகம் விரும்புவர்களாகவும் இருப்பர். பிறரிடம் அன்பு பாராட்டுவதில் இவர்களை மிஞ்ச ஆளில்லை என்று கூறலாம்.

வெள்ளை நிறம்

வெள்ளை நிறம்

எந்த விஷயத்திலும் அக்கறையுடன் செயல்படுவர். ஆழமான கருத்துக்களை தெரிந்து வைத்திருப்பர். நேர்மை, பண்பு உள்ளிட்ட குணாதிசயங்களை கொண்டவர்கள். எளிமையான வாழ்க்கையை விரும்புவார்கள்.

நீல நீறம்

நீல நீறம்

வெளிர் நீல நிறம் கொண்ட கார்களை வைத்திருப்பவர்கள் மிகவும் அடக்கமாகவும், அமைதியான குணாதிசயத்தை பெற்றிருப்பர். எவ்வளவு டிராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டாலும், அதை பற்றி கவலைப்படாமல் எப்போதும் கூலாக இருப்பர். அடர்ந்த நீல நிற காரை வைத்திருப்பவர்கள் பிறரை சார்ந்திருக்கும் குணாதிசயத்தை கொண்வர்கள்.

 பழுப்பு நிறம்

பழுப்பு நிறம்

பழுப்பு நிற கார்களை வைத்திருப்பவர்கள் மிக எளிமையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பச்சை நிறம்

பச்சை நிறம்

செல்வ வளத்துடன் சரிவிகிதமான வாழ்க்கையை வாழ்பவர்கள்.

இளஞ்சிவப்பு

இளஞ்சிவப்பு

இளஞ்சிவப்பு நிற கார்களை பெரும்பாலும் பெண்களே அதிகம் விரும்புகின்றனர். இளமையையும், அப்பாவித்தனத்தையும் வெளிப்படுவதாக கூறப்படுகிறது.

அடர் ஊதா நிறம்

அடர் ஊதா நிறம்

அடர் ஊதா நிறம் கொண்ட கார்களை வைத்திருப்பவர்கள் அதிக சுதந்திரத்தை விரும்புபவர்களாக இருக்கின்றனராம்.

மஞ்சள் நிறம்

மஞ்சள் நிறம்

அனைவரும் என்னை திரும்பி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மஞ்சள் வண்ணத்தை தேர்வு செய்கின்றனராம்.

 உண்மையா?

உண்மையா?

உங்களது கார் கலருக்கும்,ஆய்வில் கொடுக்கப்பட்டுள்ள குணாதிசயங்களும் உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறதா? - விரும்பினால் கருத்துப் பெட்டியில் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆய்வு முடிவு எந்தளவு உண்மையானது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Most Read Articles
English summary
Here is the fascinating list of personality traits that are revealed by the colour of your car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X