ஜூனில் சுஸுகி மோட்டார்சைக்கிள் விற்பனை 42% அதிகரிப்பு

Suzuki Motorbike
டெல்லி: ஜூன் மாதத்தில் சுஸுகி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனை 42 சதவீதம் அதிகரித்துள்ளது..

ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.

மாதத்திற்கு மாதம் அந்த நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

இதேபோன்று ஜூன் மாதத்திலும், அந்த நிறுவனத்தின் விற்பனை கணிசமான உயர்வை சந்தித்துள்ளது.

இதுகுறித்து சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு துணைத்தலைவர் அதுல் குப்தா கூறியதாவது:

"மார்க்கெட்டில் எங்களது அனைத்து வகை வாகனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

இதனால், எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி கூடிக்கொண்டே வருகிறது

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 17,895 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருந்தோம்.

ஆனால், கடந்த மாதம் 25,367 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளோம்.

இதை, ஒப்பிடும்போது விற்பனை 42 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து தரமான தயாரிப்புகளை வழங்குவோம்," என்றார்.

Most Read Articles

English summary
Two-wheeler maker Suzuki Motorcycle India Pvt Ltd (SMIPL) on Thursday reported a 42 per cent growth in sales in June 2011, at 25,367 units as compared to 17,895 units in the same month last year.
Story first published: Friday, July 1, 2011, 10:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X