750,1000 சிசி மோட்டார்சைக்கிள்கள்: ராயல் என்பீல்டு திட்டம்

Royal Enfield Chrome
சென்னை: 750, 1000சிசி மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த ராயல் என்பீல்டு திட்டம்... என்ற செய்தியை கேட்டவுடன் பலர் இருக்கையிலிருந்து விருட்டென எழுந்து கம்ப்யூட்டர் மவுசை சுழற்றும் பரவசத்தை காண முடிகிறது.

அசாத்திய பலம், கம்பீரம், அது எழுப்பும் அலாதியான தடதட ஒலி என பல ப்ளஸ் பாயிண்டுகளை கொண்டு சந்தையில் சத்தமில்லாமல் வெற்றிநடைபோடும் புல்லட் மோட்டார்சைக்கிள்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் என்றுமே தனிமரியாதை பெற்றிருக்கிறது.

விரைவில் 500சிசி குரோம் புல்லட் மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு அறிமுகப்படுத்த உள்ளது. புதிய 500சிசி புல்லட்டை வாங்குவதற்கு பல வாடிக்கையாளர்கள் கனவுகளுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், 750சிசி மற்றும் 1000 சிசி புல்லட் வேரியண்டுகளை அறிமுகப்படுத்த ராயல்என்பீல்டு திட்டமிட்டுள்ளதாக இணையதளங்களில் செய்தி கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது 350 சிசி திறன் கொண்ட புல்லட் ரூ.ஒரு லட்சம் விலையிலும், 500 சிசி புல்லட் ரூ.1.5 லட்சம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், புதிதாக வரும் புல்லட் மாடல்கள் ரூ.4 லட்சம் முதல் ரூ.7 லட்சம் விலையில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ராயல்என்பீல்டு நிறுவனம் புதிய புல்லட் மாடல்கள் குறித்து தகவல்கள் எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

Most Read Articles
English summary
Royal Enfield has always impressed its buyers in India and regardless of what is going on in the two wheeler industry, the manufacturer’s charm has never seen an obstacle. Recently it was in news concerned with the official launch of Royal Enfield Classic Chrome 500 expected anytime soon.The latest news surrounding the brand is drawing a lot of attention over the internet and it reports that the brand is planning to introduce a new segment of Bullet motorcycles with engine capacities of 750 CC and 1000 CC. This is no joke and I can imagine many of the readers jumping off their seats after hearing this.he current line-up with 350CC and 500CC monsters covers the price band from Rs. 1 Lakh to Rs. 1.5 Lakh and we expect these machines to cost between Rs. 4 and Rs. 7 Lakh. As of yet no confirmation nod has been given by the brand on the reports.
Story first published: Thursday, August 4, 2011, 11:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X