ஹோண்டா ஆக்டிவாவுக்கு போட்டியாக வரும் ஹீரோ மேஸ்ட்ரோ

Hero Maestro Scooter
லண்டன்: புதிய சின்னம் அறிமுகப்படுத்திய கையோடு, புதிய பவர் ஸ்கூட்டரையும் அதே மேடையில் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம். தவிர, இம்பல்ஸ் என்ற ஆன்/ஆப் ரோடு பைக்கையும் அறிமுகம் செய்துள்ளது.

ஹோண்டா பிரிவையடுத்து, ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் மிகப்பெரிய வர்த்தக விரிவாக்கப்பணிகளை செய்து வருகிறது. உலகின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் தயாரிப்பளார் என்ற பெருமையை தக்கவைக்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ரூ.200 கோடி மதிப்பீட்டில் புதிய பிராண்டு பெயர் மற்றும் சின்னங்களை வடிவமைத்து அதை பிரபலத்தும் பணிகளில் ஹீரோ மோட்டோ கார்ப் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று லண்டனில் நடந்த புதிய சின்னம் அறிமுகம் செய்வதற்கான பிரம்மாண்ட விழாவில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், 109சிசி திறன் கொண்ட மேஸ்ட்ரோ என்ற பெயரில் முதல் பவர் ஸ்கூட்டரையும், இம்பல்ஸ் என்ற ஆன்/ஆப்ரோடு பைக்கையும் அறிமுகம் செய்தது.

இதில், மேஸ்ட்ரோ பவர் ஸ்கூட்டர் சந்தையில் கணிசமான பங்கை ஒதுக்கிக்கொண்டிருக்கும் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா மற்றும் ஏவியேட்டர் ஸ்கூட்டர்களுக்கு கடும் சந்தை போட்டியை கொடுக்கும் என்று தெரிகிறது.

ஹீரோ மோட்டோ கார்ப்பின் புதிய ஸ்கூட்டர் 8 பிஎச்பி திறனையும், 9என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். மைலேஜ் அதிகம் கொடுக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, சாதாரண சாலைகள் மற்றும் கரடு முரடான சாலைகளிலும், சாகச பயணங்களுக்கும் ஏற்ற இரட்டை பயன்பாடு அம்சம் கொண்ட இம்பல்ஸ் என்ற 150சிசி புதிய ஆன்/ஆப் ரோடு பைக்கையும் அறிமுகம் செய்தது.

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் பேனரில் வரப்போகும் இந்த புதிய மோட்டார்சைக்கிள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் மார்க்கெட்டில் கால் பதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Hero MotoCorp also announced two new products, the Hero MotoCorp Impulse, which is a dual purpose motorcycle and the Maestro, which is an ungeared scooter, for the Indian market, scheduled to launch later this year. The Hero MotoCorp Maestro scooter will feature a 109cc four stroke engine, which most probably is the same unit that powers the Honda Activa and the Honda Aviator given that it produces 8 Bhp of peak power and 9 Nm of peak torque. The Hero MotoCorp Impulse Dual Purpose motorcycle’s four stroke engine displaces 150cc , leading us to strongly suspect that it is nothing but a rebadged Honda NXR150 BROS which Honda sells in the Brazilian market.
Story first published: Friday, August 12, 2011, 11:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X