பிரிமியம் பைக்குகளுக்கு பிரத்யேக ஷோரூம்: பஜாஜ்

Bajaj Pulser 220
டெல்லி: பல்சர் 220 சிசி மற்றும் அவெஞ்சர் உள்ளிட்ட பிரிமியம் பைக்குகளுக்கென பிரத்யேக ஷோரூம்களை திறக்க பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளது.

அதிக திறனும், வடிவமைப்பு வசதிகளும் கொண்ட பிரிமியம் பைக் மார்க்கெட்டில் முக்கியத்துவம் பெற பஜாஜ் ஆட்டோ தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பிரத்யேக புரோ பைக்கிங் ஷோரூம்களை திறக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இலங்கை, நேபாளம், பூடான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் பிரிமியம் மார்க்கெட்டை விரிவுபடுத்தவும் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ துணைத்தலைவர் எரிக் வாஸ் கூறியதாவது:

"நாட்டின் 30 முக்கிய நகரங்களில் 32 புரோ-பைக்கிங் ஷோரூ்ம்களை திறக்க முடிவு செய்துள்ளோம். இதில், பல்சர் 220 சிசி, அவெஞ்சர், கவாஸாகி நிஞ்சா 250ஆர் மற்றும் 650 ஆர் பைக்குள் மற்றும் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ள கேடிஎம் டியூக் பைக்குகளை மட்டும் விற்பனை செய்ய இருக்கிறோம்.

தவிர, நேபாளம், பூடான், வங்கதேசம் மற்றும் இலங்கையிலும் புரோ-பைக்கிங் ஷோரூம்களை திறக்க முடிவு செய்துள்ளோம். இதன்மூலம், பிரிமியம் பைக் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பெற முடியும் எனறு நம்புகிறோம்," என்றார்.

Most Read Articles
English summary
Bajaj Auto, the Indian motorcycle major is expanding the network of its exclusive showrooms of premium bikes India and neighbouring countries. In India, Bajaj has 32 Probiking outlets in 30 cities and it has plans to add at least a dozen more to this list.
Story first published: Tuesday, June 14, 2011, 15:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X