வேகத்திற்கு விருந்து கொடுக்கும் பெர்ஃபாமென்ஸ் பைக்குகள்- சிறப்பு பார்வை

Yamaha R 15
இன்றைய இளைஞர்கள் பைக் வாங்கும்போது அது எந்த சிசி ரகத்தை சேர்ந்தது என்று கேட்டுவிட்டுத்தான் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குகின்றனர். 150சிசி க்குமேல் இருந்தால்தான் அதை பைக்காக மதிக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு 150சிசி மற்றும் 220சிசி பைக்குகளின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் பிக்கப்தான் காரணம். தங்களின் வேகத்திற்கு தகுந்தாற்போல் விருந்து கொடுக்கும் அதிக சிசி திறன் கொண்ட பைக்குகள் இளைசுகளின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளன.

மேலும், எல்லா நிறுவனங்களின் பைக்குகளும் ஒரே சிசி திறனை கொண்டிருந்தாலும், அதில் ஒரு சில பைக்குகள் அதிக சிறப்பம்சங்களை கொண்டதாக இருக்கிறது. அதை தெரிந்துகொள்ள சிக்னல்களில் நிற்பவர்கள், நண்பர்கள், சொந்தக்காரர்கள் என அனைவரிடமும் சர்வே நடத்தி முடித்துவிட்டுத்தான் பைக்கை தேர்வு செய்கின்றனர்.

இந்த அளவுக்கு இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதையடுத்து 150சிசி பைக்குகளை விட்டு தற்போது 220சிசி பைக்குகளுக்கு அதிகரித்து வரும் எதிர்பாராத மவுசு காரணமாக மார்க்கெட்டில் முன்னணி நிறுவனங்கள் ஏராளமான மாடல்களை வரிசை கட்டியுள்ளன. இதில், குறிப்பிட்ட சில பைக்குகளின் சிறப்பம்சங்களை காணலாம்.

ஹீரோ ஹோண்டா கரீஷ்மா/ இசட்எம்ஆர்

அழகிய அசுரா என்று கூறும் அளவுக்கு வடிவமைப்பிலும், பிக்கப்பிலும் அசத்துகிறது கரீஷ்மா. இதன் உயர்வகை மாடலான இசட்எம்ஆர் வடிவமைப்பு அம்சமாக இருக்கிறது. 223சிசி ஏர்கூல்டு கொண்ட கரீஷ்மாவின் எஞ்சின் 17.6 பிஎச்பி ஆற்றலை அனாயசமாக வாரி இறைக்கும் திறன் கொண்டது. இதன் டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் இதன மவுசை கூட்டுகிறது. ஹீரோ ஹோண்டாவின் கூட்டுத்தொழில்நுட்பத்தில் உருவான பைக் என்பதால் கூடுதல் உத்திரவாதத்தை கொடுக்கிறது.

பவர்: 17பிஎச்பி @ 7,000 ஆர்பிஎம்
டார்க்: 18.35 பிஎச்பி @ 6,000 ஆர்பிஎம்
விலை:கரீஷ்மா ரூ.89,000(தோராய விலை)
கரீஷ்மா இசட்எம்ஆர்: ரூ.1,11,000(தோராய விலை)

பை-டோன் பல்சர் 220சிசி:

நம் நாட்டு சந்தையின் 150சிசி பிரிவில் முக்கிய மற்றும் முதலிடத்தை பிடித்துள்ள பல்சர், சளைக்காமல் 220சிசி செக்மெண்டிலும் அதே நிலையை தக்கவைத்துக்கொண்டுள்ளது. வடிவமைப்பு, பிக்கப் என அனைத்திலும் டிஸ்டிங்சன் அடிக்கிறது பல்சர் 220சிசி. விலையிலும் பல்சர் மற்ற பைக்குகளை ஒப்பிடுகையில் சற்று குறைவாக இருப்பதும் சாதகமான அம்சம். சமீபத்தில் 220சிசி பல்சரில் டியூவல் டோன் வண்ணத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது பஜாஜ். இது பைக்கின் அழகை மேலும் மெருகூட்டுவதாக இருக்கிறது.

பவர்:21பிஎஸ்@ 8,500 ஆர்பிஎம்
டார்க்:19.12என்எம்@7,000 ஆர்பிஎம்
விலை: ரூ.84,000(தோராய விலை)

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்-180

220சிசி செக்மெண்டில் முன்னிலை வகிக்கும் பல்சருக்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்-180 மிக கடும் போட்டியை கொடுத்து வருகிறது. 180சிசி செக்மெண்டை சேர்ந்த பைக்காக இருந்தாலும், 220சிசி பல்சருக்கு ரேஸ்டிராக்கில் சரிசமமாக பாய்ந்து வியக்க வைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்கும் சில முன்னணி நிறுவனங்களில் டிவிஎஸ் நிறுவனமும் ஒன்று. அந்த வகையில், அப்பாச்சி ஆர்டிஆர்-180 பைக்கில் முதன்முறையாக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்தி உள்ளது டிவிஎஸ். அனைத்து வாகனங்களுக்கும் எதிர்காலத்தில் தேவையான தொழில்நுட்பமாக இது கருதப்படுகிறது.

பவர்: 17.3பிஎச்பி@ 8,500 ஆர்பிஎம்
டார்க்:15.5 என்எம் @ 6,500 ஆர்பிஎம்
விலை: ரூ.87,900 (தோராய விலை)

லைட்வெயிட் எஞ்சினுடன் சீறும் யமஹா ஆர்-15

இந்தியாவில் ஆர் வரிசை மாடல்கள் பைக் சந்தையில் யமஹாவின் கையை வெகுவாக உயர்த்தியுள்ளது. ஆர் வரிசையை சேர்ந்த பைக்குகளின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் அசத்தலான வடிவமைப்புக்கு இந்தியாவில் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. நவீன தொழில்நுட்ப அம்சங்களின் கலவையாக வந்துள்ள ஆர்-15 பைக் லிக்யூடு கூலிங் எஞ்சின், டெல்டா-பாக்ஸ் பிரேம், ஃபோர்ஜ்டு பிஸ்டன் என தனது ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு ஏதுவான அம்சங்களை பெற்றுள்ளது. இலகு எடை கொண்ட இதன் எஞ்சின் பிக்கப்பில் சீறுகிறது. இதன் புதிய மாடலை விரைவில் அறிமுகப்படுத்த யமஹா திட்டமிட்டுள்ளது.

பவர் 17பிஎஸ் @ 8,500 ஆர்பிஎம்
டார்க்: 15என்எம் @ 7,500 ஆர்பிஎம்
விலை: ரூ.1,03,000(தோராய விலை)

Most Read Articles
English summary
Before we start, we must clarify a few things. First and foremost, the machines listed here are not ‘performance’ bikes by international standards. However, like most other things, bike categories too take a different meaning in this part of the world. So, here gentlemen, we have a list of the bikes which wouldn’t disappoint you on your ride through the twisties over a weekend, while still not burning a hole though your pocket.
Story first published: Wednesday, August 17, 2011, 11:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X