ஹோண்டா சிபிஆர் 250ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்-சிறப்பு பார்வை

ஹோண்டா சிபிஆர்250ஆர் சிறப்பம்சங்கள்:
தோற்றத்தில் சிபிஆர் மிரட்டுகிறது. முன்பக்க ஹெட்லைட் ஸ்கூப்புடன் பெட்ரோல் டேங்கை இணைத்து பாந்தமாக இருக்கும் வகையில் பைபர் ப்ளாஸ்ட் பாடியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இரட்டை வண்ணக்கலவையில் சிபிஆர் கண்களை கவர்கிறது.
அரக்கன் எழுந்திருப்பது போன்ற தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் டேங்க வடிவமைப்பு சிபிஆருக்கு நெஞ்சை நிமிர்த்தியது போன்று கம்பீரமான தோற்றத்தை தருகிறது. ஸ்டெப்டு இருக்கைகள் மெருகை கூட்டுகிறது.
இது 250 சிசி லிக்யூடு கூல்டு, 4-ஸ்ட்ரோக் எஞ்சினுடன் வந்துள்ளது. நகர்ப்புற சாலைகள், நெடுஞ்சாலைகள் என எந்த சாலைகளில் ஓட்டினாலும் சிபிஆர்-250ஆர் அற்புதமான ரைடிங் சுகத்தை கொடுக்கிறது. சிபிஆர்250ஆர் கையாளுமையிலும் இருப்பதால், தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற பைக்காகவும் இருக்கும்.
நகர்ப்புறங்களில் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் 40கிமீ வேகத்தில் டாப் கியரில் சென்றாலும், அதிர்வுகள் இல்லாமல் ஸ்மூத்தாக செல்கிறது. டெஸ்ட் டிரைவ் செய்தபோது சிபிஆர்250ஆர் லிட்டருக்கு 30கிமீ சென்றது.
இதில், ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) கொண்ட மாடல் பாதுகாப்பு அம்சங்களில் நிறைவை தருகிறது. ஹோண்டா சிபிஆர்250ஆர் ஸ்டான்டர்டு மாடல் ரூ.1.46 லட்சத்திலும், ஏபிஎஸ் மாடல் ரூ.1.72 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








