விரைவில் இந்தியா வரும் டிரையம்ப் சூப்பர் பைக்குகள்

Triumph Tiger
டெல்லி: மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் புகழ்வாய்ந்த பிரிட்டனை சேர்ந்த டிரையம்ப் நிறுவனம், விரைவில் தனது அதிக சக்திவாய்ந்த சூப்பர் பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் அதிக திறன்கொண்ட சூப்பர் பைக்குகள் மீதான மோகம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அடுத்தடுத்து களமிறங்கி வருகின்றன.

பிஎம்டபிள்யூ, ஹயோசங், அப்ரில்லா, கவாஸாகி ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்து அதிக திறன் கொண்ட பைக்குகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி ஆக்கிரமித்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து, பிரிட்டனை சேர்ந்த டிரையம்ப் நிறுவனமும் தனது கிளாசிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

தண்டர்பேர்டு 1600, டைகர் 1050, ஸ்டீரீட் டிரிப்பிள் 675, ஸ்பீடு டிரிப்பிள் 1050, ராக்கெட் III ரோட்ஸ்டெர், போனிவில்லி அமெரிக்கா உள்ளிட்ட ஏராளமான மாடல்களை அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில், டைகர் 1050 உள்ளிட்ட பெரும்பாலான மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தனது மோட்டார்சைக்கிள்களை பிரிட்டனிலேயே தயாரித்து, இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய டிரையம்ப் திட்டமிட்டுள்ளது.

இறக்குமதி செய்து விற்பனை செய்வதால், வரி உள்ளிட்ட காரணங்களால், விலை நிர்ணயம் குறித்து அந்த நிறுவனம் இதுவரை எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

Most Read Articles
English summary
British motorcycle brand, Triumph to launch super bikes in the Indian market soon. Attracted by the exponential growth of the Indian auto industry. The company is likely to make its entry in India via the CBU route and import motorcycles in the country for retail sale.
Story first published: Sunday, June 19, 2011, 14:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X