எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய ஹை பேர்டு சைக்கிள்ஸ்

Hi Bird e Scooter
லூதியானா: சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையிலான, இரண்டு புதிய பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஹை பேர்டு சைக்கிள்ஸ் நிறுவனம்.

சைக்கிள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் லூதியானாவை சேர்ந்த ஹை பேர்டு நிறுவனம், பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பிலும் கால் பதித்து உள்ளது. லித்தியம் அயான் பேட்டரியில் இயங்கும் இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது ஹை பேர்டு.

இதுகுறித்து ஹை பேர்டு தலைவர் ஷர்மா கூறியதாவது:

"சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்தும் விதமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்புக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்குவதற்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், டெல்லி மற்றும் சண்டிகர் அரசுகள் ஒரு பேட்டரி ஸ்கூட்டருக்கு ரூ.5,000 வரை மானியம் அளிக்கிறது.

தவிர, எதிர்காலத்தில் பேட்டரி ஸ்கூட்டர்களுக்கு அதிக கிராக்கி ஏற்படும். இவற்றை கருத்தில்கொண்டு, புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கியுள்ளோம். ரூ.27,000 மற்றும் ரூ.28,900 விலையில் சந்தையில் பேட்டரி ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளோம். இந்த பேட்டரி ஸ்கூட்டர்கள் மணிக்கு அதிகபட்சம் 100 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது.

பேட்டரியை 5 முதல் 6 மணிநேரம் ரீச்சார்ஜ் செய்தால் 70 கி.மீ., வரை செல்லலாம். ஆண்டுக்கு 10,000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு தரமான தயாரிப்புகளை வழங்குவதே எங்களது குறிக்கோள்," என்று கூறினார்.

Most Read Articles
English summary
Hi Bird, a leading manufacturer and exporter of bicycles from India has forayed into two wheeler market with launch of two models of eco friendly electronic scooters for the first time.
Story first published: Monday, March 28, 2011, 17:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X