2 மில்லியன் பைக்குகளை ஏற்றுமதி செய்ய பஜாஜ் ஆட்டோ இலக்கு

Bajaj Pulsar
மும்பை: அடுத்த மூன்று அல்லது நான்காண்டுகளில், ஆண்டுக்கு 20 லட்சம் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்ய பஜாஜ் ஆட்டோ இலக்கு நிர்ணயித்துள்ளது.

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளராக திகழும் பஜாஜ் ஆட்டோ ஏற்றுமதியிலும் சிறந்து விளங்குகிறது. கடந்த 2010-11 நிதிஆண்டில் 12 லட்சம் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை அந்த நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் பஜாஜ் ஆட்டோவின் மொத்த உற்பத்தியில் ஏற்றுமதி 28.5 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனம் ரூ.4,552 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. தவிர, அதற்கு முந்தைய நிதிஆண்டைவிட, கடந்த நிதிஆண்டில் அந்த நிறுவனத்தின் ஏற்றுமதி 35 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கும் நடவடிக்கைகளில் பஜாஜ் ஆட்டோ தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தனது இருசக்கர வாகனங்களை பஜாஜ் ஆட்டோ ஏற்கனவே ஏற்றுமதியை துவங்கிவிட்டது.

இந்த நிலையில், அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் ஆண்டுக்கு 20 லட்சம் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்ய இலககு வைத்துள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் கூறினார்.

Most Read Articles
English summary
Bajaj Auto, India's second largest two-wheeler manufacturer has said it is aiming to export 1 to 2 million two-wheelers per year in the next three to four years. The company has set its sights on the international markets and has already started exporting its models to Africa and South East Asia. Bajaj Auto has already exported more than one million two wheelers and three wheelers. Rahul Bajaj. The chairman of Bajaj Auto Ltd (BAL) said: “ Bajaj Auto has exported more than 1.2 million units (in FY 2011). I look forward to breaching the 2 million mark in the next three to four years.”
Story first published: Tuesday, August 16, 2011, 17:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X