ஹார்லிடேவிட்சன் பார்ட்டிஎயிட்(48) பைக்- சிறப்பு பார்வை

Harley Davidson Forty Eight
இன்றைய இளம் தலைமுறையினரின் மனம்கவர்ந்த குரூஸர் பைக்தான் ஹார்லி டேவிட்சனின் பார்ட்டி எயிட்(48).

அமெரிக்காவை சேர்ந்த பழமைவாய்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லிடேவிட்சன் இந்தியாவில் 14 வகையான பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

இதில், அந்த நிறுவனத்தின் 15 வது மாடலாக சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல்தான் பார்ட்டி எயிட்.

குரூஸர் பைக்கில் என்னென்ன அம்சங்கள் இருக்கவேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ, அத்துனை அம்சங்களையும் பார்த்து பார்த்து செதுக்கி வடிவமைத்துள்ளது ஹார்லிடேவிட்சன்.

இதனால், நம்மூர் இளசுகள் மத்தியில் 48க்கு எக்கச்சக்க மவுசு ஏற்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பும், ரைடிங் ஸ்டைலும் அப்பப்பபா... சூப்பர்.

பார்ட்டி எயிட்டில் 1200 சிசி ஏர்கூல்டு எஞ்சினை பொருத்தியுள்ளது ஹார்லிடேவிட்சன். இதனால், நீண்ட தூர பயணங்களின்போது திக்காமல், திணறாமல் செல்கிறது பார்ட்டி எயிட் எஞ்சின.

அதநவீன எலக்ட்ரானிக் கன்ட்ரோல் ப்யூவல் இன்ஜெக்சன் சிஸ்டம் கொண்ட வி-ட்வின் எஞ்சின் என்பதால், பிக்கப்பில் சிறுத்தையாய் சீறுகிறது.

ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும் வகையில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

நகர்ப்புற சாலைகளில் லிட்டருக்கு 18 கி.மீ செல்கிறது பார்ட்டி எயிட். 250 கிலோ எடை கொண்ட பார்ட்டி எயிட்டில் ரைடிங்கின்போது அற்புதமான பயண உணர்வை கொடுக்கிறது.

பார்ட்டி எயிட் பைக்கின் ஸ்டான்டர்டு மாடல் ரூ.10 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
Harley Davidson's popular Sportster Harley Davidson Forty Eight coming to a classy and macho hot-rod Sportster with 1200CC V-Twin air cooled engine with electronic sequential port fuel injection technology. It gives awesome mileage 18 KMPL in the city driving conditions.
Story first published: Monday, June 20, 2011, 9:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X