மேம்படுத்தப்பட்ட புதிய கிளாமர் பைக்குகள்: ஹீரோ ஹோண்டா அறிமுகம்

Hero Honda Glamour
டெல்லி: ரூ. 50,500 விலையில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய கிளாமர் பைக் மாடல்களை ஹீரோ ஹோணடா அறிமுகம் செய்துள்ளது.

சந்தை போட்டியை சமாளிக்கும் விதமாக தனது மோட்டார்சைக்கிள்களை புதிய அம்சங்களை புகுத்தி அறிமுகம் செய்து வருகிறது ஹீரோஹோண்டா.

கடந்த மாதம் கரீஷ்மா மற்றும் இசட்எம்ஆர் பைக்குகளின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடல்களை அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது.

இதைத்தொடர்ந்து, தனது 125 செக்மென்ட் பைக்கான கிளாமரை புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது ஹீரோ ஹோண்டா.

புதிய ஸ்டிக்கர் டிசைன்கள், புத்தம் புதிய டிரேப்சாயிடல் வடிவமைப்புடன் கூடிய முகப்பு விளக்குகள், புதிய வைசர் உள்ளி்ட்ட அம்சங்களுடன் வந்துள்ளது புதிய கிளாமர் எப்ஐ.

மேலும், டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் ஆகிய இரண்டு மாடல்களில் புதிய கிளாமர் வருகிறது. புதிய கிளாமர் பைக்குகள் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரவல்ல ப்யூவல் இன்ஜெக்ட் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

தவிர, சிவப்பு கலர் மற்றும் நீல வண்ணம் கலந்து இரண்டு கருப்பு கலர்களில் வருகிறது

இதுகுறித்து ஹீரோ ஹோண்டா மூத்த துணைத்தலைவர் அனில் துவா கூறுகையில்," கிளாமர் பைக்குகள் ஹீரோ ஹோணடாவுக்கு புதிய பரிமாணத்தை கொடுக்கும். மேலும், 125 செக்மென்டில் தனது இடத்தை வெகுவாக தக்கவைத்துக்கொள்ளும் அம்சங்கள் கிளாமரில் உள்ளது," என்றார்.

புதிய கிளாமர் பைக்குகள் ரூ.50,500 முதல் ரூ.59,500 எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Hero Honda has launched facelifted versions of its motorcycles Glamour and Glamour FI, priced between Rs 50,500 and Rs 59,500 (ex-showroom price).
Story first published: Saturday, June 18, 2011, 14:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X