4 வது ஆலையை அமைக்க ஹீரோ ஹோண்டா திட்டம்

Hero Honda Logo
டெல்லி: உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக விரைவில் 4 வது மோட்டார்சைக்கிள் தொழிற்சாலையை அமைக்க ஹீரோ ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான விளங்கும் ஹீரோ ஹோண்டாவின் விற்பனை வேகமாக வளர்ந்து வருகிறது.

இதற்கு தக்கவாறு, உற்பத்தி திறனை அதிகரிக்க அந்த நிறுவனம் தொலைநோக்குடன் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக விரைவில் புதிய ஆலையை அந்த நிறுவனம் நிர்மாணிக்க உள்ளது. புதிய ஆலை பற்றிய அறிவிப்புகளை இன்னும் சில வாரங்களில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து விற்பனைப் பிரிவு துணைத்தலைவர் அனில் துவா கூறுகையில்," வரும் 2013ம் ஆண்டுக்குள் புதிய ஆலை கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. புதிய ஆலையை குஜராத் அல்லது கர்நாடகத்தில் அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்," என்றார்.

புதிய ஆலையின் உற்பத்திய திறன் மற்றும் முதலீடு குறித்து அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ரூ.800 கோடி முதலீட்டு தொகையில் பெரும் பகுதி புதிய ஆலை அமைக்க பயன்படுத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles

English summary
Hero Honda said it will announce the location and investment details for its proposed fourth plant within the next few weeks. The company is understood to have shortlisted Gujarat and Karnataka for setting up the plant.
Story first published: Thursday, June 30, 2011, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X