ஹீரோ மோட்டோ கார்ப் புதிய சின்னம் லண்டனில் கோலாகல அறிமுகம்

Hero moto corp new Logo
லண்டன்: ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் புதிய லோகோ லண்டனில் நடந்த பிரம்மாண்ட விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

உலகின் நம்பர் ஒன் இருசக்கர வாகன நிறுவனமாக திகழும் ஹீரோ ஹோண்டோவின் பெயர் சமீபத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஹீரோ ஹோண்டா குழுமத்திலிருந்து ஹோண்டா விலகியத்தையடுத்து, முஞ்சால் குழுமம் ஹீரோ ஹோண்டாவின் பெயரை மாற்றியது.

இந்த நிலையில், இருசக்கர வாகன மார்க்கெட்டில் தனித்து பயணம் மேற்கொள்ள இருக்கும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் லண்டனில் நேற்று நடந்த பிரம்மாண்ட விழாவில் தனது புதிய சின்னத்தை அறிமுகம் செய்தது.

ஹீரோ பெயரில் வரும் முதல் ஆங்கில எழுத்தான 'எச்' முப்பரிமாணத்தில் மேலே இருப்பது போலவும், ஹீரோ என்ற பெயர் 3டி தொழில்நுட்பத்தில் அதற்கு கீழே இருக்குமாறும் புதிய சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பாலிவுட் நடிகர்கள் ஷாரூக்கான், ரன்பீர் கபூர் மற்றும் பிரபல பாடகர் அகோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைத்த புதிய பாடல் விழாவில் இசைக்கப்பட்டது.

இதுதவிர, மேஸ்ட்ரோ பவர் ஸ்கூட்டர் மற்றும் புதிய டர்ட் பைக்கையும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய சின்னம் மற்றும் பெயர் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தை உலக அரங்கில் முக்கிய இடத்துக்கு கொண்டு செல்லும் என அந்த நிறுவனத்தின் தலைவர் பிரிஜ்மோகன் லால் கூறினார்.

Most Read Articles
English summary
Hero Group was supposed to unveil its new brand identity today at London. Well, the company has unveiled its new brand identity in London today, along with the new150cc dirk bike for India which was caught testing a few days back. The new Hero MotoCorp logo has been unveiled in a grand event in the presence of stars such as Ranbir Kapoor, Shah Rukh Khan and Akon.The new logo for Hero Motocorp has the word Hero with a capital H, and rest of the letters in lowercase. The brand identity adorns red and black colours over a white background. The logo also comprises of a triangle, a parallelogram and a trapezoid as its part which together form the ‘H’ representing Hero in 3D.
Story first published: Wednesday, August 10, 2011, 14:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X