ஒரு மில்லியன் மோட்டார்சைக்கிள் விற்பனை: யமஹா இலக்கு

Yamaha Logo
அடுத்த இரு ஆண்டுகளுக்குள் ஒரு மில்லியன் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்ய யமஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மோட்டார்சைக்கிள் விற்பனையில் ஹீரோ ஹோண்டா மற்றும் பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. இருப்பினும், அந்த நிறுவனங்களுக்கு ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனம் கடும் போட்டியை கொடுத்து வருகிறது.

அடுத்த இரு ஆண்டுகளில் மோட்டார்சைக்கிள் விற்பனையை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ள இதற்காக புதிய ஆலையை கட்டுவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து யமஹா இந்தியா தலைமை செயல் அதிகாரி ஹிரோயூகி சூசுகி கூறியதாவது:

" வரும் 2013ம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்ய இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறோம். இதற்கு ஏதுவாக புதிய மாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளோம்.

அடுத்த ஆண்டு ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடல்களையும் அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

ஆண்டுக்கு 6 லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்த சூரஜ்பூர் ஆலையை ரூ.45 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 7 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யும் ஆலையாக விரிவாக்கம் செய்ய உள்ளோம்.

தவிர, மூன்றாவதாக புதிய ஆலையை நிர்மானிப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்," என்றார்.

Most Read Articles

English summary
Yamaha Motor has an ambitious target of selling one million units in the next couple of years. According to reports they plan to invest Rs.45 cr by 2012 in capacity expansion and extend its reach in smaller cities with top-end products to achieve the sales target. He was also mentioned as saying that they are planning to launch scooters next year.
Story first published: Wednesday, June 29, 2011, 12:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X