வரும் 30ந் தேதி புதிய பல்சரை அறிமுகப்படுத்த பஜாஜ் திட்டம்?

Bajaj Pulsar
வரும் 30ந் தேதி புத்தம் புதிய பல்சரை அறிமுகப்படுத்த பஜாஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருசக்கர வாகன உற்பத்தியில் நாட்டின் இரண்டாவது பெரிய நிறுவனமான பஜாஜ் ஆட்டோ மார்க்கெட் போட்டியை சமாளிக்க புதிய பல்சர் மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது.

வடிவமைப்பில் பல மாற்றங்கள் மற்றும் புதிய எஞ்சினுடன் புதிய மாடல் பல்சர் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. டெல்லி ஆட்டோ கண்காட்சியிலேயே புதிய பல்சரை பஜாஜ் ஆட்டோ அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தனது மினி காரை அறிமுகப்படுத்தி பல்சரின் எதிர்பார்ப்பை மீடியா மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து குறைத்துக்கொண்டது. இந்த நிலையில், நேற்று நடந்த பஜாஜ் ஆட்டோவின் காலாண்டு வர்த்தக முடிவுகளை அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் அறிவித்தார்.

அப்போது வெகு விரைவில் புதிய பல்சர் மார்க்கெட்டிற்கு வரும் என்பதை சூசகமாக தெரிவித்தார். மேலும், வரும் 30ந் தேதி புதிய பல்சர் அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, வரும் 24ந் தேதி கேடிஎம் ட்யூக் 200 ஆப்ரோடு பைக்கை அறிமுகப்படுத்த இருப்பதாக பஜாஜ் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Country's second largest two wheeler maker Bajaj auto planning to launch the much awaited New Pulsar on 30th Jan, says reports. The new Pulsar will equipped with liquid cooled engine and added more new features.
Story first published: Friday, January 20, 2012, 15:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X