மும்பையில் டோணியின் 2013 பைக் ரேஸ் அணி அறிமுகம்

டோணி ரேஸிங் டீம்
அடுத்த ஆண்டுக்கான எப்ஐஎம் சூப்பர் பைக் ரேஸ் பந்தயங்களுக்கான டோணியின் புதிய ரேஸ் டீம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நடந்த விழாவில் இந்த புதிய அணியை டோணி அறிமுகம் செய்தார்.

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மஹேந்திர சிங் டோணி கடந்த ஆகஸ்ட்டில் சொந்தமாக சர்வதேச பைக் ரேஸ் அணியை துவங்கினார். 600சிசி ரக பைக்குகள் பிரிவில் டோணியின் அணி கலந்து கொண்டு வருகிறது. அடுத்த ஆண்டு முதல் டோணியின் அணி முழு உத்வேகத்துடன் சூப்பர் பைக் பந்தயங்களில் பங்கேற்க உள்ளது.

இதற்காக டோணியின் புதிய பைக் ரேஸ் டீம் அறிமுக விழா மும்பையில் நடந்தது. பழைய வீரர்கள் தவிர முன்னாள் சாம்பியன்கள் 2 பேர் டோணி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தனது அணியின் 'எம்எஸ்டி ஆர்-என் ரேஸிங் டீம் இன்டியா' என்ற பெயரை "மஹி ரேஸிங் டீம் இன்டியா" என மாற்றம் செய்துள்ளார் டோணி.

மேலும், அடுத்த ஆண்டு மார்ச்சில் இந்தியாவில் முதன்முறையாக நடைபெற உள்ள சர்வதேச எம்ஐஎம் சூப்பர் பைக் பந்தயத்தில் டோணி அணியும் பங்கேற்க உள்ளது. டோணி அணியினர் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்கை பயன்படுத்த உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டோணி கூறுகையில்," நம் நாட்டில் சூப்பர் பைக் பந்தய வீரர்களை உருவாக்குவதற்கான பயிற்சி பள்ளியை திறக்க திட்டமிட்டுள்ளோம். வரும் ஆண்டுகளில் நமது அணியில் இந்திய வீரர்களும் இடம் பெறுவார்கள்," என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

டோணியின் பைக் ரேஸ் டீமில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் ஒரு பார்ட்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Indian cricket captain Mahendra Singh Dhoni's Superbike Championship team on Wednesday changed its name from MSD R-N Racing Team India to Mahi Racing Team India and signed two new members.
Story first published: Thursday, November 8, 2012, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X