சொந்தமாக பைக் ரேஸ் அணியை துவங்கிய டோணி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி சூப்பர் பைக்குகள் மீது தீராத காதல் கொண்டவர் என்பது அறிந்த ஒன்று. இந்த நிலையில், பைக்குகளின் மீதுள்ள ஆர்வத்தால் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளார் டோணி.

Dhoni launches his bike racing team MSD R N
ஆம், தனது பெயரிலேயே புதிய பைக் ரேஸிங் அணியை தொடங்கியுள்ளார் டோணி. அவரது பெயர் சுருக்கமான எம்எஸ்டி என்று துவங்கும் வகையில், 'எம்எஸ்டி ஆர்-என் ரேஸிங் டீம் இந்தியா' என்று தனது அணிக்கு பெயரிடப்பட்டுள்ளார். இந்த புதிய அணியில் பிரான்சை சேர்ந்த ஃப்ளோரியன் மரினோ மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த டான் லின்ஃபூட் ஆகியோர் வீரர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய அணி எப்ஐஎம் சூப்பர்ஸ்போர்ட் வேர்ல்டு சாம்பியன்ஷிப் அமைப்பில் சேர்ந்துள்ளது. டோணியின் அணி கவாஸாகியின் இசட்எக்ஸ்-6 ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்கை பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டோணி பைக் ரேஸிங் அணியின் நிர்வாகி அமீத் சந்தீல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

"நீண்ட கால திட்டத்துடன் பைக் ரேஸ் துறையில் இறங்கியிருக்கிறோம். ஆசியாவில் பைக் ரேஸிங் அவ்வளவாக பிரபலமாகவில்லை. இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது. எனவே, ஆசியாவில் பைக் ரேஸ் வளர்ச்சி பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்வோம். இந்தியாவில் பைக் ரேஸிங் அகடமியை நிறுவுவதற்கும் திட்டம் உள்ளது," என்று கூறியுள்ளார்.

டோணி பைக் ரேஸிங் அணியில் இடம்பெற்றுள்ள லின்பூட் கடந்த 2008ம் ஆண்டு சூப்பர்ஸ்டாக் 600 ரேஸ்களில் இரண்டு முறை வெற்றி பெற்றவர். மரினோ 4 முறை சூப்பர் ஸ்டாக் 600 ரேஸ் பட்டத்தை வென்றவர்.

சூப்பர்ஸ்போர்ட் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் 2,3 அல்லது 4 சிலிண்டர்கள் கொண்ட 4 ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்ட பைக்குகள் பயன்படுத்தப்படும். இந்த பைக்கள் 85 கிமீ வேகம் முதல் 110 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.

அடுத்த சூப்பர்ஸ்போர்ட் சாம்பியன்ஷிப் பைக் ரேஸ் அடுத்த மாதம் 9 ந்தேதி ஜெர்மனியில் துவங்குகிறது.

Most Read Articles
English summary
India captain MS Dhoni's love for bikes is a well known fact. And his passion for speed has gone to the next well as Dhoni has launched his own racing team and has already started competing in the FIM Supersport World Championship.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X