டோணியின் புதிய ஹெல்கேட் சூப்பர் பைக்-சிறப்பு பார்வை

கிரிக்கெட்டை நேசிக்கும் அளவுக்கு பைக் மற்றும் கார்கள் மீதும் டோணிக்கு அலாதி பிரியம் வைத்திருக்கிறார். கவாஸாகி, ஹார்லி டேவிட்சன் பேட் பாய் என அனைத்து பிரபல நிறுவனங்களின் சூப்பர் பைக்குகளும் டோணியிடம் உள்ளது. அந்த வகையில், சமீபத்தில் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹெல்கேட் சூப்பர் பைக்கை இறக்குமதி செய்துள்ளார் டோணி.

தென்கிழக்கு ஆசியாவில் இந்த பைக்கை வாங்கிய முதல் நபர் டோணிதான். டெல்லியில் இருக்கும் இந்த பைக்கை விரைவில் அவர் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு எடுத்து செல்ல திட்டமிட்டிருக்கிறார். இந்த நிலையில், இத்தனை பைக்குகள் இருக்கும் நிலையில் ஹெல்கேட்டை டோணி விரும்பி வாங்கியதற்கு காரணம் அதன் வடிவமைப்பு மற்றும் தரம். இந்த பைக் குறித்த சில முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.

Dhoni's X132 Helcar superbike- special review

அமெரிக்காவிலுள்ள அலபாமா நகரை சேர்ந்த கான்படரேட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புதான் எக்ஸ்132 ஹெல்கேட் சூப்பர் பைக். தற்போது டோணி இறக்குமதி செய்துள்ள ஹெல்கேட் மூன்றாம் தலைமுறையை சேர்ந்தது. கடந்த ஆண்டுதான் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் போன்றே ஹெல்கேட் பைக்கையும் வாடிக்கையாளர்கள், தங்களது விருப்பம்போல் கூடுதல் அம்சங்களுடன் கஸ்டமைஸ் செய்து வாங்கி கொள்ளலாம். சிறுத்தை பாய்வதை போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது ஹெல்கேட்.

இந்த பைக்கில், விமான தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் அதிக உறுதிகொண்ட அலுமினியத்தில் இதன் எஞ்சின் கேஸிங் தயாரிக்கப்படுகிறது. குறைந்த வேகம், அதிவேகம் மற்றும் அனைத்து சாலைநிலைகளுக்கு ஏற்ற கஸ்டம் மார்சோஸிர் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த பைக்கில் 2,163சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 132 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்த சுஸுகி ஹயபுசாவை விட இது அதிக வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

5 ஸ்பீட் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. 215 கிலோ எடை கொண்டது ஹெல்கேட். இந்த பைக்கின் சக்கரங்கள் அதிக உறுதி கொண்ட கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. முன்பக்க ஹெட்லைட்டில் எல்இடி லைட்டுகள் மற்றும் ரன்னிங் லைட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பின்புறமும் ரன்னிங் விளக்குகள் இருக்கின்றன.

அலபாமா, பெர்மிங்காமில் உள்ள கான்படரேட் தொழிற்சாலையில் ஒரு வாரத்திற்கு 2 எக்ஸ்132 ஹெல்கேட் பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவின் மிகச் சிறந்த சூப்பர் பைக்குகளில் ஒன்றாக எக்ஸ்132 ஹெல்கேட் கருதப்படுகிறது.

இதனிடையே, டோணியிடம் மொத்தம் 11 விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள் இருக்கின்றன. இதில், சென்னையில் 2 பைக்குகளும், மும்பையில் 2 பைக்குகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னை வரும்போதும், மும்பை செல்லும்போது இந்த பைக்குகளை அவர் பயன்படுத்துகிறார். இதுதவிர, ஹம்மர் உள்பட 9 கார்கள் டோணியிடம் உள்ளது.

Most Read Articles
English summary
Dhoni is the first person in South East Asia to have a X132 Hellcat. It costs him Rs.28 lacs. Dhoni is in Delhi now and will be taking this bike to Ranchi soon. Here are given some interesting points about the X132 Helcat super bike.
Story first published: Wednesday, June 6, 2012, 12:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X