1600 சிசி எஞ்சினுடன் ஹார்லி டேவிட்சனின் புதிய பைக் அறிமுகம்

Fat Bob
ரூ.12.80 லட்சத்தில் ஃபேட் பாப் க்ரூஸர் பைக்கை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது ஹார்லி டேவிட்சன்.

இந்த புதிய பைக்கில் 1,600 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கை ஹரியானாவில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்ய உள்ளது ஹார்லி. இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் ஹார்லியின் 6வது பைக் மாடலாக ஃபேட் பாப் இருக்கும்.

இந்த புதிய பைக்கை அறிமுகப்படுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹார்லி டேவிட்சன் நிர்வாக இயக்குனர் அனூப் பிரகாஷ்,"பைக் பிரியர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் ஃபேட் பாப் இருக்கும். அடுத்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.

நாடு முழுவதும் தற்போது 9 ஷோரூம்கள் இருக்கின்றன. சிறந்த சேவையை வழங்கும் வகையிலும், விற்பனையை அதிகரிக்கவும் இரண்டாம் நிலை நகரங்களிலும் டீலர் நெட்வொர்க்கை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம். ஜெய்ப்பூர், இந்தூர் மற்றும் புனே ஆகிய நகரங்களில் புதிய ஷோரூம்கள் விரைவில் திறக்கப்படும்.

எங்களது தயாரி்ப்புகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. 2010ம் ஆண்டு மார்க்கெட்டில் கால் பதித்த நிலையில், இந்த ஆண்டில் மட்டும் 2,000 பைக்குகள் விற்பனை என்ற புதிய அளவை கடந்து விடுவோம்," என்றார்.

Most Read Articles
English summary
American premium Two wheeler maker Harley Davidson has launched its 'Fat Bob' model in India priced at Rs 12.8 lakh.
Story first published: Friday, November 23, 2012, 11:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X