தந்திராஸ் பண்டிகையன்று ஒரு லட்சம் பைக்குகளை விற்ற ஹீரோ

Hero Splendor
தந்திராஸ் பண்டிகையான நேற்றுமுன்தினம் ஒரு லட்சம் பைக்குகளை விற்று ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை படைத்திருக்கிறது.

அட்சய திரிதியை நாளன்று தங்கம் வாங்குவது போன்று வடநாட்டில் தந்திராஸ் நாளன்று பொருட்களை வாங்கினால் செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தங்கம், வெள்ளி என பட்டியல் நீண்டாலும் அன்றைய தினம் புதிய வாகனத்தை வாங்குவது மிகவும் சிறப்பானதாக கருதுகின்றனர்.

எனவே, தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாள் முன்னதாக கொண்டாடப்படும் தந்திராஸ் பண்டிகையன்று வாகனங்களை டெலிவிரி பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து காத்திருப்பது வழக்கம். அந்த வகையில், இரு தினங்களுக்கு முன் கொண்டாடப்பட்ட தந்திராஸ் பண்டிகையன்று வடநாட்டில் வாகன விற்பனை அமோகமாக இருந்தது. நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் இதற்கு ஒரு படி மேலே சென்று அசத்தியிருக்கிறது.

தந்திராஸ் பண்டிகையன்று மட்டும் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. அதிலும் குறிப்பாக, அன்றைய தினம் மட்டும் 40,000 ஸ்பிளென்டர் பைக்குகளை விற்பனை செய்துள்ளதாக ஹீரோ தெரிவித்துள்ளது. இதுதவிர, பேஸன், மேஸ்ட்ரோ ஸ்கூட்டரின் விற்பனையும் அமோகமாக இருந்ததாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
World largest two wheeler manufacturer Hero MotoCorp has retailed over 1,00,000 units of two-wheelers on the auspicious day of Dhanteras.
Story first published: Wednesday, November 14, 2012, 10:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X