மூன்று வண்ணங்களில் ஜொலிக்கும் ஹோண்டா சிபிஆர் 250ஆர்

Honda CBR 250 R
மூன்று வண்ணங்கள் கொண்ட கிராபிக்ஸ் ஸ்டிக்கர்களில் கலக்கும் புதிய சிபிஆர் 250ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்கை ஹோண்டா அறிமுகம் செய்கிறது.

பெர்ஃபார்மென்ஸ் பைக்குகள் மார்க்கெட்டில் ஹோண்டா சிபிஆர் 250ஆர் ஸ்போர்ட்ஸ் பைக் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஸ்போர்ட்டி லுக்கை தரும் நேர்த்தியான வடிவமைப்பு, அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட எஞ்சின் ஆகியவை ஹோண்டா சிபிஆர் 250 ஆர் பைக்கை மார்க்கெட்டில் நிலைநிறுத்தியதற்கு முக்கிய காரணங்கள்.

இந்த நிலையில், மார்க்கெட்டில் பல புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்கள் அடுத்தடுத்து களமிறங்கி வருவதால், புதிய மாற்றங்களுடன் சிபிஆர் 250ஆர் பைக்கை ஹோண்டா விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

ஏற்கனவே கேண்டி ரூபி ரெட் மற்றும் அக்கியூரட் சில்வர் மெட்டாலிக் மற்றும் ஆஸ்டிராய்டு பிளாக் மெட்டாலிக் ஆகிய இரட்டை வண்ணங்கள் கொண்ட ஸ்டிக்கர்களில் ஹோண்டா சிபிஆர் 250ஆர் கிடைக்கிறது.

இந்த நிலையில், ஏற்கனவே உள்ள கலர்களுடன் தற்போது பியர்ல் ஹெரோன் புளூ வண்ணத்தை கலந்து தற்போது மூன்று வண்ண கலவையுடன் சிபிஆர் 250ஆர் பைக்கை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வருகிறது. புதிய ட்ரை கலர் சிபிஆர் 250ஆர் பைக்குக்கு கூடுதல் பொலிவையும், கவர்ச்சியையும் கூட்டுவதாக உள்ளது.

ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் ஏற்கனவே பொருத்தப்பட்டிருக்கும் அதே 250 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சினுடன் வரும். எஞ்சினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த எஞ்சின் 25 பிஎச்பி ஆற்றலையும், 22.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
The Honda CBR 250R is undoubtedly one of the sportiest looking performance bike in India. And it is set to become more stunning after Honda announced it will be adding a new tri-colur paint scheme. The CBR 250R is currently available in twin colour options.The CBR 250R will now be available in a stunning new combination of Pearl Heron Blue in addition to the 2 existing dual-tone colour options- Candy Ruby Red with Accurate Silver Metallic and Asteroid Black Metallic with Accurate Silver Metallic. The new tri colour scheme in the CBR 250R will be available in showrooms soon.
Story first published: Monday, January 16, 2012, 15:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X