மூவர்ணத்தில் கலக்கும் புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் அறிமுகம்

Tri Colour CBR 250 R
மனதை மயக்கும் மூன்று வண்ணங்கள் காம்பினேஷனில் கலக்கும் புதிய சிபிஆர் 250ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்கை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

பெர்ஃபார்மென்ஸ் பைக்குகள் மார்க்கெட்டில் ஹோண்டா சிபிஆர் 250ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்குக்கு தனி இடம் கிடைத்துள்ளது. நேர்த்தியான வடிவமைப்பு, அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட எஞ்சின் ஆகியவை ஹோண்டா சிபிஆர் 250 ஆர் பைக்கை மார்க்கெட்டில் நிலைநிறுத்தியதற்கு முக்கிய காரணங்களாகியுள்ளன.

இந்த நிலையில், யமஹா, பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் வரவால் ஹோண்டா சிபிஆர் 250 ஆர் பைக்குக்கு சிறிது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியை குறைத்துக்கொள்ளவும், வாடிக்கையாளர் கவனம் பிற புதிய மாடல்கள் பக்கம் திரும்பாதவாறும் இருக்கும் வகையில், மனதை மயக்கும் மூன்று வண்ணங்கள் கொண்ட புதிய சிபிஆர் 250 ஆர் பைக்கை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

கேண்டி ரூபி ரெட் மற்றும் அக்கியூரட் சில்வர் மெட்டாலிக் மற்றும் ஆஸ்டிராய்டு பிளாக் மெட்டாலிக் ஆகிய இரட்டை வண்ணங்கள் கொண்ட ஸ்டிக்கர்களில் ஹோண்டா சிபிஆர் 250ஆர் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இனி சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிற காம்பினேஷனுடன் புதிய ஹோண்டா சிபிஆர் 250 ஆர் கிடைக்கும்.

ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் ஏற்கனவே பொருத்தப்பட்டிருக்கும் அதே 250 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சினுடன் வரும். எஞ்சினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த எஞ்சின் 25 பிஎச்பி ஆற்றலையும், 22.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

ஹோண்டா சிபிஆர் 250 ஆர் தற்போது ரூ.1.44 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பியர்ல் ஹெரான் புளூ என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய மூவர்ண ஹோண்டா சிபிஆர் 250 ஆர் முந்தைய மாடல்களை விட ரூ.1,000 கூடுதல் விலையுடன் ரூ.1.45 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
English summary
Honda has launched the tri colour variant of its CBR 250R sports bike at Rs.1.45 lakhs. This new variant of the bike is more expensive than the standard version by Rs.2,000. The CBR 250 R with ABS is priced at Rs.1.70 lakhs. The bike was unveiled at the recently concluded Delhi Auto Expo.
Story first published: Wednesday, February 29, 2012, 17:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X