முன்கூட்டியே டியூக் 390 பைக்கை களமிறக்கும் கேடிஎம்

அடுத்த ஆண்டு பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட டியூக் 390 பைக்கை முன்கூட்டியே அறிமுகப்படுத்த கேடிஎம்-பஜாஜ் கூட்டணி திட்டமிட்டுள்ளது. 375 திறன் கொண்ட எஞ்சினுடன் வரும் இந்த புதிய டியூக் மஹாராஷ்டிர மாநிலம் சகனில் உள்ள பஜாஜ் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

டியூக் 200 போன்றே இந்த பைக்குக்கும் பெரும்பான்மையான பாகங்களை இந்தியாவிலேயே பெறப்பட இருப்பதால் சவாலான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு மார்ச்சில் இந்த புதிய பைக்கை விற்பனைக்கு கொண்டு வர கேடிஎம் திட்டமிட்டுள்ளது. மிலன் ஆட்டோ ஷோவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்கின் பிரத்யேக படங்களை ஸ்லைடரில் காணலாம்.

மிரட்டும் தோற்றம்

மிரட்டும் தோற்றம்

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் 200 டியூக் பைக்கை விட தோற்றத்தில் இன்னும் மிரட்டலாக இருக்கிறது. எஞ்சினுக்கு பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் பிரத்யேக கிரில்கள் கூடுதல் பலம்.

எஞ்சின்

எஞ்சின்

44 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 373.2 சிசி எஞ்சினுடன் வர இருக்கும் இந்த புதிய பைக் 6 ஸ்பீட் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கும்.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

பின்புற தோற்றமும் அசத்தலாக இருக்கும் புதிய கேடிஎம் டியூக் 390 பைக்கிலும் மோனோ ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டிருக்கும்.

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

முன்புறத்தில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கும். இலகு எடை கொண்ட அலாய் வீல்களுடன் வருகிறது.

அறிமுகம்

அறிமுகம்

2013 மார்ச் மாதத்தில் இந்த புதிய பைக்கை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ்-கேடிஎம் கூட்டணி திட்டமிட்டுள்ளது.

உற்பத்தி

உற்பத்தி

மஹாராஷ்டிர மாநிலம், சகனில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் ஆலையில்தான் இந்த புதிய பைக்கும் அசெம்பிள் செய்யப்படும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.2 லட்சத்தில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
KTM is planning to launch the powerfull version Duke 390 in India soon. The company has already updated its website which reads that the above bike will be launched soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X