பைக்குகளுக்கான உயர்தர ட்யூப்லெஸ் டயர் உருவாக்கிய மெட்ரோ

Tubeless Tyre
பைக்குகளுக்கான உயர்தர ட்யூப்லெஸ் டயரை உருவாக்கியிருப்பதாக மெட்ரோ டயர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த புகழ்பெற்ற ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பாளரான கான்டினென்டல் ஏஜி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த உயர்தர ட்யூப்லெஸ் டயரை மெட்ரோ உருவாக்கியுள்ளது.

லூதியானாவில் உள்ள தனது ஆலையில் இந்த உயர் தரம் வாய்ந்த டயர்களை உற்பத்தி செய்வதற்காக ரூ.30 கோடியை அந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ டயர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரம்மி சாப்ரா கூறியதாவது:

"சர்வதேச அளவில் டயர் மார்க்கெட்டில் எங்களுக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது. புதிய ட்யூப்லெஸ் டயர் மூலம் எங்களது நிறுவனத்தின் மதிப்பு உயரும்.

லூதியானா மட்டுமின்றி மானேசரில் ட்யூப்லெஸ் டயர் உற்பத்தியை துவங்குவதற்காக ரூ.50 கோடியை முதலீடு செய்ய உள்ளோம்.

சர்வதேச மார்க்கெட்டில் எங்களது டயர்களை கான்டினென்டல் நிறுவனத்தின் வாயிலாக விற்பனை செய்ய உள்ளோம். மேலும், கான்டினென்டல் நிறுவனத்திற்கு ட்யூப்லெஸ் டயர் சப்ளையும் துவங்கப்பட்டு விட்டது.

உள்நாட்டு சந்தையில் விரைவில் இந்த புதிய உயர்தர டயர் விற்பனையை துவங்க இருக்கிறோம். 250 சிசி ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள்களுக்கான ட்யூப்லெஸ் டயர்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம்," என்றார்.

Most Read Articles
English summary
Punjab based tyre manufacturer Metro has developed high end tubeless tyres for Motorcycles. The Metro has developed the new tubeless tyre collabration with Continental AG.
Story first published: Tuesday, January 17, 2012, 13:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X