மெக்சிகோவில் தாறுமாறாக பைக் ஓட்டி வந்த 6 வயது சிறுவனுக்கு அபராதம்

Child Motorcyclist
மெக்சிகோவில் தாறுமாறாக பைக் ஓட்டி வந்து கார் மீது மோதிய 6 வயது சிறுவனுக்கு போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவிலுள்ள சியூதாத் ஜுரெஸ் நகரைச் சேர்ந்தவர் கர்லா நோரிகா. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தனது 6 வயது மகன் கேல் சான்டியாகோவுக்கு அழகிய குட்டி பைக்கை கர்லா பரிசாக வாங்கித் தந்தார்.

இந்த நிலையில், சிறுவன் கேல் அந்த பைக்கை எடுத்துக்கொண்டு தனது வீ்ட்டையொட்டிய சாலையில் ரவுண்டு சென்றுள்ளான். அப்போது, அங்கிருந்த சிக்னல் ஒன்றை அந்த சிறுவன் கடக்க முயன்றபோது எதிரே வந்த எஸ்யூவிகார் மீது பைக் மோதியது.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக சிறுவன் காயம் அடையவில்லை. இருப்பினும், தாறுமாறாக ரோட்டில் பைக் ஓட்டி வந்ததற்காக அந்த சிறுவனை எச்சரித்த போலீசார், அவன் ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும், லைசென்ஸ் இல்லாமல் பைக்கை ஓட்டி வந்ததற்காக, அந்த சிறுவனுக்கு 183 டாலரை (ரூ.9,000) போலீசார் அபராதமாக விதித்தனர்.

இதைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் எஸ்யூவியை ஓட்டி வந்த பெண் மீதும் தவறு இருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுவனின் தாயார் அபராதத்தை செலுத்தி அந்த குட்டி பைக்கை போலீசாரிடமிருந்து சிமீட்டு வந்துள்ளார். மேலும், சிறுவனுக்கு அபராதம் விதித்ததற்கு அந்த சிறுவனின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

6 வயதில் எப்படி லைசென்ஸ் பெற முடியும் என்றும், போலீசாரின் செயல் பொருத்தமானது அல்ல என்றும் சிறுவனின் தாயார் கர்லா கூறியுள்ளார். கடந்த மாதம் நடந்த இச்சம்பவம் குறித்து சமீபத்தில் சிறுவனின் தாயார் மீடியா மூலம் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

Most Read Articles
English summary
Traffic police of Mexican city fined a 6 year old boy for riding his toy motorcycle without a license.
Story first published: Tuesday, January 24, 2012, 11:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X