வாயுவில் இயங்கும் கான்செப்ட் பைக்: ஆஸ்திரேலிய மாணவர்கள் கண்டுபிடிப்பு

அழுத்தப்பட்ட வாயுவில் இயங்கும் புதிய பைக் மாடலை பைக்கை ஆஸ்திரேலியாவை சேர்ந்த எஞ்சினியரிங் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். ஓ2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கான்செப்ட் பைக் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 100 கிமீ வரை செல்லும் என்று இதனை உருவாக்கியுள்ள மாணவர்கள் குழு தெரிவித்துள்ளது.

யமஹாவின் டர்ட் பைக்கின் பிரேமில் உருவாக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்க்கை எடுத்துவிட்டு ஆழ்கடலுக்குள் செல்பவர்கள் முதுகில் கட்டிக்கொண்டு செல்லும் ஆக்சிஜன் டேங்க்கை எடுத்து பொருத்தியுள்ளனர். பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக வாயுவில் இயங்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்ட எஞ்சினை பொருத்தியுள்ளனர். இந்த பைக் பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் இந்த பைக்கின் சோதனை ஓட்ட வீடியோவை ஸ்லைடரில் காணலாம்.

டாப் ஸ்பீட்

டாப் ஸ்பீட்

யமஹா டபிள்யூ 250ஆர் டர்ட் பைக்கின் பிரேமில்தான் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

யமஹா ஃபிரேம்

யமஹா ஃபிரேம்

யமஹா டபிள்யூ 250ஆர் டர்ட் பைக்கின் பிரேமில்தான் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

இலகு எடை கொண்டிருப்பதால் ஒரு முறை அழுத்தப்பட்ட வாயுவை நிரப்பினால் 100 கிமீ வரை செல்ல முடியுமாம்.

சுற்றுச் சூழலுக்கு உற்ற நண்பன்

சுற்றுச் சூழலுக்கு உற்ற நண்பன்

எலக்ட்ரிக் பைக்குகளில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரியால் கூட சுற்றுச்சூழலுக்கு பங்கம் ஏற்படும். ஆனால், இந்த பைக் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வெறும் 2 நிமிடத்தில் எரிபொருள் நிரப்பலாம்

வெறும் 2 நிமிடத்தில் எரிபொருள் நிரப்பலாம்

எலக்ட்ரிக் பைக்குகளை சார்ஜ் செய்வதற்கு பல மணி நேரம் பிடிக்கும். இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் சிலிண்டரில் 2 நிமிடத்தில் அழுத்தப்பட்ட வாயுவை நிரப்பிவிட முடியும்.

இந்தியாவிலும் ஏர் பைக்

இந்தியாவிலும் ஏர் பைக்

ஆஸ்திரேலிய மாணவர்களுக்கு முன்னதாகவே இந்தியாவிலும் அழுத்தப்பட்ட வாயுவில் இயங்கும் பைக்குகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு பெங்களூரில் நடந்த ஆட்டோ ஷோ ஒன்றில் எஞ்சினியரிங் மாணவர் ஒருவர் வடிவமைத்து பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஏர் பைக்.

டாடாவின் ஏர் கார்

டாடாவின் ஏர் கார்

அழுத்தப்பட்ட வாயுவில் இயங்கும் காரை டாடா மோட்டார்ஸ் வடிவமைத்து வருகிறது. முதல்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையி்ல், தற்போது இந்த கார் அடுத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சக்சஸ் ஆகுமா ஓ2?

சக்சஸ் ஆகுமா ஓ2?

கான்செப்ட் நிலையில் இருக்கும் ஓ2 பைக் வர்த்தக ரீதியில் வந்து புரட்சி படைக்குமா அல்லது பத்தோடு பதினோன்றாவது முயற்சியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Here is a bike that runs on pure air. Using a compressed air tank, the O2 Pursuit can run for as many as 100 kilometres and also reach a top speed of 140kmph. This dirt bike has been developed by Australian engineering students.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X