வெஸ்பா ஸ்கூட்டரை தொடர்ந்து பைக்குகளை களமிறக்க பியாஜியோ திட்டம்

Piaggio Bike
வரும் மார்ச்சில் வெஸ்பா ஸ்கூட்டரை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ள பியாஜியோ நிறுவனம் அடுத்து தனது பிரிமியம் பைக்குகளையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனம் ஐரோப்பிய மார்க்கெட்டில் இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்திய இருசக்கர வாகன மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பெறுவதற்கான முயற்சிகளை பியாஜியோ மேற்கொண்டுள்ளது.

வரும் மார்ச்சில் வெஸ்பா ஸ்கூட்டரை மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஹோண்டா மற்றும் சுஸுகி ஸ்கூட்டர்களை விட 20 முதல் 25 சதவீதம் கூடுதல் விலை கொண்டதாக பிரிமியம் ரகத்தில் தனது ஸ்கூட்டர்களை நிலை நிறுத்த பியாஜியோ திட்டமிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தனது மற்ற பிராண்டுகளான அப்ரில்லா, மோட்டோ குஸ்ஸி, பியாஜியோ, டெர்பி, கிலேரா மற்றும் லாவேர்டா உள்ளிட்ட பைக் பிராண்டுகளையும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான சாத்திக்கூறுகள் குறித்து பியாஜியா இந்தியா நிறுவனம் தற்போது ஆய்வு செய்து வருகிறது.

வரும் மார்ச் மாதத்திற்குள் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கவும் பியாஜியோ முடிவு செய்துள்ளது. பியாஜியோவின் பைக்குகள் ரூ.50,000 முதல் ரூ1.5 லட்சம் வரை விலையில் விற்பனை செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தவிர 110 முதல் 250 சிசி வரை திறன் கொண்ட மாடல்களையும் பியாஜியோ களமிறக்க முடிவு செய்துள்ளது.

Most Read Articles
English summary
Italian vehicle maker Piaggio planning to launch bike brands in India. The company to relaunch the Vespa scooter brand soon and after that it will launch the bike brands in India.
Story first published: Tuesday, January 17, 2012, 17:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X