வெஸ்பா பிராண்டில் புதிய ஸ்கூட்டர்: பியாஜியோ அறிமுகம்

2013 வெஸ்பா 946
புதிய வெஸ்பா ஸ்கூட்டர் மாடலை தனது தாயகமான இத்தாலியில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு அறி்முகப்படுத்தியிருக்கிறது பியாஜியோ.

'2013 வெஸ்பா 946' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டர் 1946ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட எம்பி-6 ஸ்கூட்டரின் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய 125 சிசி எஞ்சினுடன் வர இருக்கும் இந்த ஸ்கூட்டர் 11 பிஎச்பி ஆற்றலை கொண்டதாக இருக்கும்.

ஓல்டு இஸ் கோல்டு என்பது போல பழைய மாடல் என்றாலும் ஸ்கூட்டரின் அத்துனை தொழில்நுட்ப அம்சங்களும் புதிய தலைமுறையை சார்ந்தது. ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் வருகிறது. எல்இடி லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவை கூடுதல் மெருகை கொடுக்கும். இலகு எடைக்காக அலுமினிய பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பழைய மாடலைவிட 30 விழுக்காடு அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாகவும், 10 விழுக்காடு கூடுதல் டார்க்கை வெளிப்படுத்தும் வகையிலும் இருக்கும். அடுத்த ஆண்டு இந்தியாவில் இந்த புதிய வெஸ்பா 946 ஸ்கூட்டர் தடம் பதிக்க உள்ளது.

Most Read Articles
English summary
Italian vehicle maker Piaggio has unveiled new scooter in Vespa brand at EICMA in Milan. The new vespa scooter will be launched in India by next year.
Story first published: Wednesday, November 14, 2012, 15:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X