ஹெல்மெட் அணியாததால் பறிபோகும் உயிர்கள்: கடும் நடவடிக்கைக்கு கோரிக்கை

Two Wheeler Accident
சென்னையில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டும், ஹெல்மெட் அணியாமல் வந்து விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணி்ககை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையில், அடிக்கடி இதுபோன்று ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணி்க்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் அக்டோபர் வரை மட்டும் இருசக்கர வாகனத்தில் சென்ற 654 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில், 547 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழப்போரில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் சிக்கும்போது உடலின் பிற பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்டால் கூட உயிருக்கு ஆபத்து இருக்காது. ஆனால், தலையில் காயம் ஏற்படுவதால்தான் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. இதை தவிர்க்கும் கேடயமாக பயன்படும் ஹெல்மெட் குறித்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு இல்லை.

சென்னையில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டும் அதை பெரும்பாலான வாகன ஓட்டிகள் அதை மதிப்பதில்லை. ஏனெனில், 100 ரூபாய் என்ற அளவில் அபராதம் வசூலிக்கப்படுவதால் அதை வாகன ஓட்டிகள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

இதனால், ஒவ்வொரு மாதமும் ஹெல்மெட் அணியாதவர்களிடமிருந்து 50 லட்சம் அபராதம் வசூலிக்கப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அபராத தொகை அதிகரிக்கிறதே தவிர, ஹெல்மெட் அணியாமல் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை நகரத்துக்குள் விடாமல் போலீசார் நூதன தண்டனை அளித்தனர். வீட்டுக்கு சென்று ஹெல்மெட் அணிந்து வந்தால்தான் அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால், அங்கு அபராதம் உள்ளிட்டவை இல்லாமலே ஹெல்மெட் அணியாமல் வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது அனைத்து ஊர்களிலும் அமல்படுத்துவது சாத்தியமில்லை என்றாலும், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்குவதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். போலீசார் நடவடிக்கைகள் எடுத்தாலும் வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். எங்கு, எப்போது நடக்கும் என்று கணிக்க முடியாததே நிகழ்வே விபத்து. எனவே, ஹெல்மெட் அணிந்தே இருசக்கர வாகனங்களை ஓட்டுங்கள்.

Most Read Articles
Story first published: Wednesday, November 28, 2012, 10:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X