சுஸுகியின் புதிய 110 சிசி ஹயாட்டே பட்ஜெட் பைக்- சிறப்பு பார்வை

Suzuki Hayate
100 சிசி முதல் 125 சிசி வரையிலான திறன் கொண்ட மாஸ் பைக் மார்க்கெட் அதீத வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த பைக் மார்க்கெட்டில் ஹீரோ மற்றும் பஜாஜ் உள்ளிட்ட ஆட்டோ நிறுவனங்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கின்றன.

இருப்பினும், இந்த செக்மென்ட்டில் தனது ஒரு மாடலையாவது நிலை நிறுத்திவிட வேண்டும் என்று அனைத்து நிறுவனங்களும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், சுஸுகி நிறுவனம் மாஸ் பைக் மார்க்கெட்டுக்கான பட்ஜெட் விலை கொண்ட புதிய 110 சிசி பைக்கை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தது.

இந்த ஆண்டில் இந்திய மார்க்கெட்டில் தடம் பதிக்க உள்ள புதிய பைக் மாடல்களில் இதுவும் ஒன்று. ஹயாட்டே என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் சுஸுகியின் இந்த 110 சிசி பைக் பட்ஜெட் பார்ட்டிகளின் பாக்கெட்டிற்கு ஏற்ற பைக்காக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஹயாட்டே பைக்கின் வடிவமைப்பு சுஸுகி தற்போது விற்பனை செய்து வரும் ஸ்லிங்ஷாட் 125 பைக்கின் மினியேச்சர் மாதிரி இருக்கிறது. இருந்தாலும், ஹயாட்டேவின் வடிவமைப்பு கவர்வதாகவே உள்ளது. பொதுவாக, 100 சிசி மற்றும் 110 சிசி திறன் கொண்ட பைக்குகள் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டிருக்கும். ஆனால், ஹயாட்டே 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு பைக் வாங்க திட்டமிட்டிப்பவர்களுக்கு ஏதுவாக சுஸுகி ஹயாட்டேவின் தொழில்நுட்ப சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.

எஞ்சின்:

சுஸுகி ஹயாட்டேவில் 112.8 சிசி திறன் கொண்ட எஸ்ஓஎச்சி தொழில்நுட்த்துடன் கூடிய 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புற சாலைகளுக்கு ஏற்ற வகையில் இந்த எஞ்சினின் செயல்பாடு இருக்கும் என்று கருதப்படுகிறது.

மைலேஜ்:

எகிறி வரும் பெட்ரோல் விலையை கருத்தில்க்கொண்டு பைக் வாங்குபவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், புதிய ஹயாட்டே லிட்டருக்கு சராசரியாக 60 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்று சுஸுகி தெரிவிக்கிறது.

ஹயாட்டேவின் பொதுவான அம்சங்கள்:

112.8 சிசி 4 ஸ்ட்ரோக் எஞ்சின்

கிக் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி

5 ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்

வெட் மல்டி பிளேட்டட் கிளட்ச்

சஸ்பென்ஷன்:

முன்பக்கம்: டெலிஸ்கோப்பிக், காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன்

பின்பக்கம்: ஸ்விங் ஆர்ம், காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன்

டயர்:

முன்பக்கம்: 2.75 இஞ்ச் டயர்

பின்பக்கம்: 3 இஞ்ச் டயர்

பிரேக்:இரண்டு வீல்களிலும் டிரம் பிரேக்குகள்

பெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 12 லிட்டர்

கெர்ப் எடை: 115 கிலோ

விலை: ரூ.48,500 (தோராயா எக்ஸ்ஷோரூம் விலை)

Most Read Articles
English summary
Suzuki Hayate 110cc Specifications, Price, Review. Suzuki Motors India unveiled 110cc motorcycle at Delhi Auto Expo 2012. Read Hayate 110cc Specifications here.
Story first published: Saturday, January 21, 2012, 10:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X