பெரும் முதலீட்டில் புதிய மோட்டார்சைக்கிள் ஆலை அமைக்கும் சுஸுகி

Suzuki GSR 150 R
ஆண்டுக்கு 5 லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் வகையில், புதிய ஆலையை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் கட்டுகிறது. ரூ.2,000 கோடியில் அமைக்கப்படும் இந்த புதிய ஆலை ஹரியானாவில் அமைகிறது.

ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் மிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. 100 சிசி மற்றும் 125 சிசி மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் பல மாடல்களை வைத்திருந்தாலும் வாடிக்கையாளர்களை கவரும் அளவுக்கு இல்லை.

அதேவேளை, அந்த நிறுவனத்தின் ஜிஎஸ்ஆர் 150 ஆர் மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும், அக்செஸ் ஸ்கூட்டர் மூலம் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வருகிறது.

இந்த நிலையில், தனது விற்பனை வளர்ச்சிக்கு தக்கவாறு உற்பத்தி திறனை அதிகரித்துக்கொள்ளும் நடவடிக்கைகளை அந்த நிறுவனம் துவங்கியுள்ளது. ஹரியானா மாநிலம், ரோத்டாக்கில் ரூ.2,000 கோடியில் புதிய இருசக்கர வாகன ஆலையை கட்டுகிறது.

இந்த புதிய ஆலைக்கு ஹரியானா அரசும் ஒப்புதல் அளித்துவிட்டது. பல கட்டங்களாக இந்த புதிய ஆலையை நிர்மானிக்க சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.500 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

வரும் 2014ம் ஆண்டு முதல் இந்த ஆலை முழு அளவில் உற்பத்தியை துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Japanese motorcycle manufacturer Suzuki motorcycle company to set up a new two wheeler manufacturing plant in Rothtak in Haryana. The company to invest Rs.2,000 Cr in phased manner.
Story first published: Thursday, March 29, 2012, 14:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X