சுஸுகியின் புதிய ஸ்விஷ்- 125 ஸ்கூட்டர்- ஒரு பார்வை

Suzuki Swish 125
சுஸுகி அக்ஸெஸ் பவர் ஸ்கூட்டரின் வெற்றியை தொடர்ந்து சுஸுகி அறிமுகப்படுத்தியிருக்கும் இரண்டாவது ஸ்கூட்டர் மாடல் ஸ்விஷ்125.

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய 125 ஸ்கூட்டர் வாடிக்கையாளர் மத்தியில் அக்ஸெஸ் போன்றே பெரிய வரவேற்பை பெறும் என்று சுஸுகி கருதுகிறது.

கூர்மையான வெட்டுகளுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்விஷ் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாகவே கவரும் என்று கூறலாம்.

சுஸுகி ஸ்விஷ்-125 ஸ்கூட்டரில் 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் மற்றும் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடமும் உள்ளது.இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ப ஸ்விஷ் ஸ்கூட்டரில் முன்பக்கம் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கிறது. தினசரி பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 50 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்று சுஸுகி தெரிவித்துள்ளது.

சுஸுகி ஸ்விஷ் சிறப்பம்சங்கள்:

டிஸ்ப்ளேஸ்மென்ட்: 124 சிசி

எஞ்சின்: 124 சிசி ஓஎச்சி

அதிகபட்ச பவர்: 8.58 பிஎச்பி @7,000 ஆர்பிஎம்

அதிகபட்சம் டார்க்: 9.8 என்எம்@ 5,000 ஆர்பிஎம்

கியர்: ஆட்டோமேட்டிக்

நீளம்: 1780 மிமீ

அகலம்: 650 மிமீ

உயரம்: 1140 மிமீ

எடை: 110 கிலோ

கிரவுண்ட் கிளியரன்ஸ்:160மிமீ

பெட்ரோல் டேங்க்: 6 லிட்டர்

வீல் பேஸ்: 1250 மிமீ

ஹெட்லேம்ப்: 12v 35/35w

பேட்டரி திறன்: 5 ஏஎச்

வீல் டைப்: ரிம்

வீல் அளவு: 90/100-10மிமீ

முன்பக்க சஸ்பென்ஷன்: டெலிஸ்கோப்பிக், காயில் ஸ்பிரிங்

பின்பக்க சஸ்பென்ஷன்: ஸ்விங் ஆர்ம் டைப்

பிரேக்: டிரம் 120 மிமீ(முன்பக்கம் மற்றும் பின்பக்கம்)

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.45,000 (டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)

Most Read Articles
English summary
The new 125cc scooter from Suzuki is the Swish, which was unveiled at the recently concluded Delhi Auto Expo. The Swish is powered by a 125cc engine that has already impressed us in the Access. Suzuki is aiming the new Swish at the urban youth who prefer to have a powerful two wheeler without the trouble of having to shift gears.
Story first published: Monday, January 23, 2012, 12:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X