வெயிலோ, மழையோ... இனி பைக்கில் போய்கிட்டே இருக்கலாம்!

மழை, வெயில் என எந்தவொரு கால நிலையிலும் தடையில்லாமல் செல்லத்தக்க வகையில் புதிய எலக்ட்ரிக் பைக் ஒன்றை இங்கிலாந்தை சேர்ந்த பிரபல வடிவமைப்பு நிபுணர் பில் பாலே வடிவமைத்திருக்கிறார். கிராஸ்போ என்று பெயரிடப்பட்ட இந்த எலக்ட்ரிக் பைக் திறந்து மூடும் வசதி கொண்டதுதான் இதன் முக்கிய சிறப்பம்சம். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எலக்ட்ரிக் பைக்

எலக்ட்ரிக் பைக்

அதிக எடை கொண்டதாக தோன்றும் இந்த பைக் முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கக்கூடியது.

திறந்து மூடும் கூரை

திறந்து மூடும் கூரை

திறந்து மூடும் கூரை உறுதியானதாகவும், சிறந்த கட்டுமானத்துடனும் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஏரோடைனமிக்ஸ்

ஏரோடைனமிக்ஸ்

அதிவேகத்தில் செல்லும்போது கூட பேலன்ஸ் குறையாமல் சிறப்பாக செல்லும் வகையில் சிறந்த ஏரோடைனமிக்ஸ் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

முக்காடு போட்ட கிராஸ்போ

முக்காடு போட்ட கிராஸ்போ

பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டு ஒரு பட்டனை அழுத்தினால் அடுத்த சில வினாடிகளில் கூரை மூடிக்கொள்ளும்.

வைப்பர் வசதி

வைப்பர் வசதி

வைன்ட்ஷீல்டில் வைப்பர் பொருத்தப்பட்டிருப்பதால் மழை பெய்யும்போது கூட சாலையை தெளிவாக பார்த்து ஓட்ட முடியும் என்பதால் பயணம் தடைபட வாய்ப்பில்லை.

காலகளை ஊன்ற முடியுமா?

காலகளை ஊன்ற முடியுமா?

இந்த பைக் இரண்டு சக்கரங்களிலேயே நிற்கும் என்பதால் கார் போல அமர்ந்து செல்லலாம். கால்களை தரையில் ஊன்ற வேண்டிய அவசியம் இல்லை.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், இந்த பைக்கை நகர்ப்புறம், கரடு முரடான சாலைகள் மற்றும் ரேஸ் டிராக் என எந்தவொரு சாலையிலும் ஓட்ட முடியும் என்கிறார் பைக்கை வடிவமைத்த பில் பாலே.

Most Read Articles
English summary
When you drive your bike in rainy session, then you always think how to you will protect yourself with rain and speedy wind. But don't worry, here is Crossbow an amazing all weather bike will protect you in every weather.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X